×

காரைக்காலில் கஜா புயலில் தரை தட்டிய கப்பல்: அப்புறப்படுத்துவதில் மெத்தனம்

காரைக்கால்: காரைக்காலில் கஜா புயலின் போது தரை தட்டிய கப்பலை, அப்புறப்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் இல்லாமல் மந்தநிலையில் இருப்பதால், அடுத்த புயலின் போது உடைந்து பெரும் விபத்தை ஏற்படுத்து அபயாம் உள்ளதால், விரைந்து அப்புறப்படுத்த வேண்டும் என மீனவர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

காரைக்கால் மாவட்டம் மேல வாஞ்சூர் பகுதியில் இயங்கி வரும் மார்க் கப்பல் துறைமுகத்திற்கு, தூர்வாரும் பணிக்காக, மும்பையிலிருந்து வீரா பிரேம் என்ற பெயர் கொண்ட கப்பல், கடந்த நவம்பர் 2018ல் காரைக்கால் மார்க் கப்பல் துறைமுகத்திற்கு வந்தது. தூர்வாரும் பணி முடிந்ததையடுத்து, கப்பல் மும்பை புறப்பட்டது. அப்போது கஜா புயல் பலரை மிராடிவந்ததால், கப்பல் காரைக்கால் அருகே நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டது. நினைத்தமாதிரி, 15.11.18 அன்று வீசிய கஜா புயலில் கப்பல் நங்கூரத்துடன் பிடிங்கொண்டு, கடலில் அங்கும் இங்கும் அலைகழிக்கப்பட்டு மார்க் கப்பல் துறைமுகத்திற்கு அருகில், உள்ள மேலவாஞ்சூர் மீனவ கிராமம் அருகே குடியிருப்பு இல்லாத பகுதியில் தரைதட்டி நின்றது.
அதை தொடர்ந்து, வேதாரண்யம் காட்டுப்பகுதியிலிருந்து அடித்துவரப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட மான், காட்டுப்பன்றி, குய்திரை, பல்வேறு பறவைகள் கப்பல் ஒதுங்கிய பகுதியில் இறந்து கரை ஒதுங்கியவண்ணம் இருந்தது. கப்பல் மற்றும் இறந்வனவிலங்குகளை பார்க்க ஏராளமான மக்கள் மேலவாஞ்சூர் கடற்கரை பகுதிக்கு சென்றனர். கப்பலில் கேப்டன் உள்ளிட்ட 7 பேர், பல நாட்கள் கப்பலை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். அவர்களுக்கான உணவு மற்றும் வசதிகள் கப்பலில் இருந்ததால் பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் தப்பினர். சூரு கட்டத்தில், அவர்களூக்கான வசதிகள் கப்பலில் இல்லாமல் போகவே, அனைவரும் வேறு கப்பல் மூலம் தங்களது சொந்த ஊருக்கு சென்றனர்.

பின்னர், மும்பையில் உள்ள கப்பல் நிறுவனம், அதிகாரிகள் மற்றும் நிபுணர்களை காரைக்காலுக்கு அனுப்பி, கப்பலை மீட்க நடவடிக்கை எடுத்தனர். அவர்களின் பலகட்ட முயற்சி பயன் அளிக்காத்தால், கப்பலை உடைத்து எடுக்க முயற்சிகள் மேற்கொண்டனர். இதற்கு, மத்திய, மாநில அரசுகளின் சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. காரணம், கப்பலை உடைத்தால், அதில் இருக்கும் ரசாயன பொருட்கள், எண்ணை மற்றும் கழிவுப்பொருட்கள் கடல் நீரில் கலந்தால், கடல் மாசு அடைவதுடன், மீன்வளம் பாதிக்கும். சுற்றுச்சுழல் பாதிக்கும் என்பதால் சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கப்பல் நிறுவனம் பல லட்சம் மதிப்பிலான கப்பலை என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றது. மேலும், கப்பல் பாதுகாப்பிற்காக, இரண்டு பாதுகாவலர்கள் கப்பலில் உள்ளனர். பாதுகாவலர்களை மீறி, சில சமூக விரோத கும்பல், கப்பலில் நுழைந்து பல லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிச்செல்வதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, திருமலைராயன்பட்டினம் காவல்நிலைய போலீசார் கூறும் போது, கஜா புயலில் கரைதட்டிய கப்பல் ஓராண்டு ஆகியும் அதே இடத்தில் உள்ளது. கப்பலில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கல் இருப்பதால், பாதுகாப்பிற்கு ஊழியர்கள் போடபப்ட்டாலும், அவர்களையும் ஏமாற்றி கப்பலில் நுழையும் மர்ம நபர்கள் அங்குள்ள பொருட்களை திருசெல்கின்றனர். பாதுகாவலர்கள் கொடுத்த புகாரின் பேரில், இதுவரை இருவரை கைது செய்துள்ளோம். இருந்தாலும் திருட்டு தொடர்ந்தவண்ணம் உள்ளது. இருந்தாலும் போலீசார் அவ்வபோது கப்பல் உள்ள இடத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். என்றனர்.

மேலும், தற்போது மழைக்காலமாக இருப்பதால், கடலில் அடிக்கடி புயல் சின்னம் உருவாகி பல்வேறு பகுதிக்கு சென்றவண்ணம் உள்ளது. கஜாவைப்போல், மீண்டும் ஒரு புயல் காரைக்காலில் கரை கடந்தால், தரை தட்டி நிற்கும் கப்பலின் நிலை என்னவாகும் என்பது கேள்விக்குறியே. அப்போது, கப்பல் தானாக உடைந்து, அதில் உள்ள ரசாயணம், எண்ணெய், கழ்விகளால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கப்பலை அங்கிருந்து அப்புறப்படுத்த அல்லது உரிய பாதுகாப்புடன் நவீன் வசதிகளுடன் கப்பலை உடைத்தெடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மீனவர்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Gaja Storm ,Karaikal: Tackling Disposal Ship , Ship
× RELATED கஜா புயலின் போது மக்கள் எதிர்பால்...