×

எம்எல்ஏக்கள் யாரும் காணாமல் போகவில்லை: வதந்திகளை மறுத்த ஜோதிராதித்யா

புதுடெல்லி: தனது ஆதரவு எம்எல்ஏக்கள் யாரும் காணாமல் போகவில்லை என ம.பி. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் ஜோதிராதித்யா சிந்தியா. இவரது டிவிட்டரில் சுயவிவர குறிப்பில் குணா தொகுதி முன்னாள் எம்எல்ஏ (2002-2019), முன்னாள் மின்சார துறை அமைச்சர், வர்த்தகம் மற்றும் தொழில்துறை என குறிப்பிட்டு இருந்தார்.
தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பது தொடர்பான விவரங்கள் நீக்கப்பட்டு, பொது சேவையாளர் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

டிவிட்டரில் கட்சி தொடர்பான விவரங்கள் நீக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் சமூகவலைதளங்களில் பரவ தொடங்கியது. மேலும் மத்தியப்பிரதேச முதல்வர் கமல்நாத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் ஜோதிராதித்யா ஆதரவு எம்எல்ஏக்கள் 20 பேர் தலைமறைவாகி உள்ளனர் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், இதை ஜோதிராதித்யா சிந்தியா மறுத்துள்ளார். இந்த செய்திகள் அனைத்தும் உண்மையில்லை, வதந்திகள் என அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஜோதிராதித்யா சிந்தியா, “நான் எனது டிவிட்டர் விவரங்களை ஒரு மாதத்துக்கு முன்பே மாற்றிவிட்டேன். பயோ மிகவும் நீளமாக இருப்பதாக கருத்துக்கள் வந்தன. அதன் காரணமாக அவற்றை நான் மாற்றினேன். அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. இது தொடர்பான அனைத்து வதந்திகளும் ஆதாரமற்றவை. எந்த எம்எல்ஏவும் காணாமல் போகவில்லை. காணாமல் சென்ற எம்எல்ஏவின் பெயரை சொல்லுங்கள். உடனே அவரை பேச சொல்லுகிறேன். இந்த தகவல்கள் அனைத்தும் பொய்யானவை” என்றார்.

Tags : Jyotiraditya , MLAs, no one goes missing, rumor and refuses Jyotiradi
× RELATED விமானம் தரையிறங்கிய பிறகு பயணிகளின்...