×

மாமூல் தர மறுத்ததால் பெட்டிக்கடை சூறை போதை வாலிபர் கைது

அண்ணாநகர்: மாமூல் தர மறுத்ததால் பெட்டிக்கடையை சூறையாடிய போதை வாலிபரை போலீசார் கைது செய் தனர்.  அமைந்தகரை, கதிரவன் காலனியை சேர்ந்தவர் அகமது (50). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். மாஞ்சா கொள்ளை தெருவை சேர்ந்த ஜெயகுமார் (24) என்பவர் நேற்று முன்தினம் போதையில் இவரது கடைக்கு வந்து, கடை உரிமையாளரிடம் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார். அவர் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த ஜெயகுமார், பெட்டிக்கடையில் இருந்த பொருட்களை எடுத்து உடைத்துவிட்டு சென்றார். அப்போது வழியில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த பரத் (24) என்பவரையும் சரமாரி தாக்கியுள்ளார்.  இதுகுறித்து பரத்தின் தாய் அம்மு கொடுத்த புகாரின்படி, அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயகுமாரை கைது செய்தனர்.




Tags : Arrested drug addict
× RELATED சென்னையில் போதை மாத்திரை விற்பனை செய்த 5 பேர் கைது