×

3 மாதங்களுக்குள் ஆணை பிறப்பிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு: குற்றப்பின்னணி உள்ளவர்கள் போட்டியிட தடை கோரிய மனு

புதுடெல்லி, நவ. 26: அரசியல் கட்சிகள் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை தேர்தலில் நிறுத்துவதற்கு தடை விதிப்பது குறித்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் 3 மாதங்களுக்குள் நியாயமான உத்தரவு பிறப்பிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. இது குறித்து  பாஜ.வை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வின் உபாத்யாயா கடந்த ஜனவரியில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘‘குற்றப்பின்னணி உடையவர்கள் வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு தடை விதிக்கும்படி நடத்தை விதிகளில் தேர்தல் ஆணையம் திருத்தம் கொண்டு வரவில்லை. மேலும், ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிட்ட தகவலில், நாடாளுமன்ற உறுப்பினர்களில் 24 சதவீதத்தினர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. 2009 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 7,810 வேட்பாளர்களில் 1,158 பேர் அதாவது 15 சதவீதத்தினர் மீது குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது.

அவற்றில் 610 பேர் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 2014 மக்களவை தேர்தலில் போட்டியிட்ட 1,398 வேட்பாளர்கள் தங்கள் மீது குற்ற வழக்கு இருப்பதாக தெரிவித்துள்ளனர்’ என கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான நீதிபதிகள் அமர்வு, மனுதாரர் உபாத்யாயாவின் மனுவுக்கு, 3 மாதங்களுக்குள் நியாயமான உத்தரவு பிறப்பிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

Tags : EC ,Supreme Court , Within 3 months, the Supreme Court ordered the Election Commission
× RELATED சசி தரூருக்கு தேர்தல் ஆணையம்...