×

அன்பே... உன் காதல் என்னை கிறங்கடிக்கிறதடி... காதல் சொட்ட சொட்ட நித்தியானந்தா அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜூடன் வெளிநாட்டு பெண் புகார்

பெங்களூரு: காதல் ரசம் சொட்ட நித்தியானந்தா அனுப்பிய வாட்ஸ்-அப் மெசேஜ் மற்றும் காமரசம் நிரம்பிய படங்களுடன் வெளிநாட்டு பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். நாளுக்கு நாள் நித்தியானந்தாவுக்கு எதிரான புகார்கள் அதிகரித்து வருவதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் ராம்நகரில் நித்தியானந்தாவின் ஆசிரமம் உள்ளது. இதில், பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. சில வருடத்திற்கு முன்பு ஆர்த்திராவ் என்ற பெண், நித்தியானந்தா தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என புகார் கூறினார்.

இந்த புகார் தொடர்பான விசாரணையின்போது ஆண்மை தன்மை இல்லாதவர் என நித்தியானந்தா சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் நித்தியானந்தா ஆசிரமத்தில் குழந்தைகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றனர் என்ற புகார் எழுந்துள்ளது. டெல்லியை சேர்ந்த ஜார்த்தன் சர்மா தனது குழந்தைகளை பார்ப்பதற்கு கூட அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் அவரின் மூத்த மகள், எங்கே இருக்கிறார் என்பதே தெரியவில்லை என்றும் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், நித்தியானந்தாவின் சமூக வலைதளத்தின் முன்னாள் பொறுப்பாளரும், கனடா நாட்டு குடியுரிமை உடையவருமான (மா நித்யா சுதேவி) சாரா ஸ்டெப்ஹனி லாண்ட்ரே ராம்நகர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளரிடம் பரப்பான புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். சாரா அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கனடா நாட்டை சேர்ந்த என்னுடைய சொந்த பெயர் சாரா ஸ்டெப்ஹனி லாண்ட்ரே, நித்தியானந்தாவின் போதனையில் ஈர்ப்பு ஏற்பட்டதால்  2009ம் ஆண்டு முதல் அவருடன் தொடர்பு ஏற்பட்டது. நாளடைவில் அவரின் பேச்சில் மயங்கி 2015ல் நித்தியானந்தாவின் ஆசிரமத்திற்கு வந்து விட்டேன். ஆசிரமத்தில் தங்கியிருந்த எனக்கு நித்தியானந்தாவின் சமூக வலைதள கணக்குகள் உள்ளிட்டவைகளை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்து மதத்தின் மீது எனக்கு இருந்த ஆழ்ந்த நம்பிக்கையின் காரணமாக நித்தியானந்தாவின் கவர்ச்சி பேச்சில் மயங்கி கிடந்தபோது என்னிடம் தவறான முறையில் நடந்தார். ஆன்மிக ஞானிபோல் போலி வேடம் போட்டுக்ெகாண்டு உண்மையில் காமகளியாட்டங்களில் ஈடுபடுவதை அப்போதுதான் உணர்ந்து கொண்டேன். 2015 செப்டம்பர் மாதம் முதல் ஆசிரமத்தில் வசித்த எனக்கு நித்தியானந்தாவின உண்மை முகத்தை அறிந்து கொள்வதற்கு 36 மாதம் பிடித்தது. 2018 ஆகஸ்ட் மாதம் நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் இருந்து வெளியேறி சொந்த ஊருக்கு சென்று விட்டேன்.

ஆசிரமத்தில் இருந்து விலகிய பிறகுதான் என்னால் தற்போது சுயமாக சிந்திக்க முடிகிறது. அத்துடன் நித்தியானந்தாவுக்கு எதிராக புகார் அளிக்கும் தைரியமும் எனக்கு கிடைத்துள்ளது. நித்தியானந்தா ஆசிரமத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீது பாலியல் பலாத்காரம் ஆன்மிகம் என்ற பெயரில் நடக்கின்றன. ஒரு சமயம், நித்தியானந்தா என்னிடம் தவறான முறையில் நடந்து கொண்டார். இரண்டு முறை அவருக்கு அந்தரங்க சேவை செய்ய வற்புறுத்தப்பட்டேன். நித்தியானந்தா ஆண்மை தன்மை இல்லாதவர் என்று கூறப்படுவது பொய்யாகும். நித்தியானந்தாவுக்கு ஆண்மை தன்மை இருக்கிறது. பெண்களிடம் பாலியல் உறவில் ஈடுபடும் திறனும் அவருக்கு இருக்கிறது. ஆர்த்திராவ், நித்யானந்தா மீது பாலியல் புகார் அளித்தார். அந்த புகார் உண்மை ஆகும்.

இந்து சமயத்தின் மீது ஈர்ப்பு கொண்ட என்னை போல் பலரும் நித்தியானந்தாவின் சூழ்ச்சியில் அகப்பட்டு திண்டாடி வருகிறார்கள். இந்து மதத்தின் பெயரில் பலரின் வாழ்க்கை சீரழியும் முன்பு அதை தடுத்து நிறுத்த வேண்டும். இந்து மதத்தின் புனித தன்மையும் காப்பாற்றப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சுமார் 20 பக்கங்கள் கொண்ட புகார் மனுவில் நித்தியானந்தா எப்படி எல்லாம் நடந்து கொள்வார் என்பதையும், அவர் காதல் ரசம் சொட்ட, சொட்ட அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜ்கள், காமகளியாட்ட புகைப்படங்கள் ஆகியவற்றையும் சாரா இணைத்துள்ளார். உன்னை நான் காதலிக்கிறேன், உன் அன்பு என்னை கிறங்கடிக்கிறது என்ற பாணியில் பல மெசேஜ்களை நித்தியானந்தா, அனுப்பி உள்ளது தெரியவந்துள்ளது.

Tags : Nithyananda , Dear ... your love is making me cry ...
× RELATED நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து 2...