2 தலை, 3 கைகளுடன் பிறந்த அதிசய குழந்தை

விதிஷா: மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்துக்கு உட்பட்ட சுஜா கிராமத்தை சேர்ந்தவர் ஜஸ்வந்த். இவரது மனைவி பபிதா அகிர்வார்(23). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது. கர்ப்பமாக இருந்த பபிதாவிற்கு கடந்த சனியன்று பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து விதிஷா மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு பிரசவம் பார்த்தனர். பபிதாவிற்கு 3.3 கிலோ எடை கொண்ட ஆண் குழந்தை பிறந்தது. 2 தலை, 3 கைகள், 4 உள்ளங்கைகளுடன் பிறந்த அதிசய ஆண் குழந்தையை பார்த்த மருத்துவர்கள் உட்பட அனைவரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். குழந்தை உடல்நிலை மோசமாக இருந்ததால் உடனடியாக தீவிர சிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Related Stories:

>