×

ஹாங்காங் உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக சார்பு கட்சி வெற்றி

ஹாங்காங்: ஹாங்காங்கில் நடைபெற்ற மாவட்ட கவுன்சில் தேர்தலில் ஜனநாயக சார்பு கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியளவு தன்னாட்சி பெற்ற நகரமான ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்டத்தை திரும்ப பெறக்கோரி கடந்த 6 மாதமாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதாவது ஹாங்காங்கில் குற்றம் செய்தவர்களை நாடு கடத்தி சீனாவிடம் ஒப்படைப்பதுதான் இந்த சட்டத்தின் நோக்கம்.போராட்டங்கள் ஒருபுறம் நடந்து வந்த நிலையில் ஹாங்காங்கில் மாவட்ட கவுன்சில் தேர்தல் நேற்று முன்தினம் விறுவிறுப்பாக நடைபெற்றது. 452 மாவட்ட கவுன்சிலுக்கு இந்த தேர்தல் நடத்தப்பட்டது. மாவட்ட கவுன்சிலுக்கு பஸ் வழித்தடங்கள் மற்றும் குப்பைகளை சேகரித்தல் போன்ற பொறுப்புகள் உள்ளதால் இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படாது. ஆனால் தற்போது பிரச்னைக்குரிய மசோதா திரும்பபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஹாங்காங்  நிர்வாக தலைவர் கேரி லாமுவுக்கு விடுக்கப்பட்ட சோதனையாக இந்த தேர்தல் கருதப்படுவதால் தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 41.30 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் மொத்தம் 71 சதவீத வாக்குகள் நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது பதிவாகியிருந்தாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 4 ஆண்டுக்கு முன் நடைபெற்ற தேர்தலில் 47 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தன. அப்போது நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக சார்பு கட்சியை சேர்ந்த 100 பேர் வெற்றி பெற்றிருந்தனர். இந்த நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் சீன ஆதரவு சார்பு அரசியல் கட்சி மிக மோசமான தோல்வியை சந்தித்தது. ஹாங்காங் ஜனநாயக சார்பு கட்சியினர்  பெரும்பான்மையான மாவட்ட கவுன்சில்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

மொத்தம் 201 ஜனநாயக சார்பு கட்சி ேவட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதாகவும், சீன ஆதரவு கட்சியினர் 28 பேர் வெற்றி பெற்றுள்ளதாகவும், 12 சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த கேரி லாம் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ ஹாங்காங் மாவ ட்ட கவுன்சில் தேர்தல் முடிவுகள் குறித்து கூறுகையில் `‘ஹாங்காங் சீனாவின் ஆளுகைக்கு உட்பட்டது. இதனால் இந்த தேர்தல்  முடிவுகள் பற்றி சீனாவுக்கு கவலையில்லை’’ என தெரிவித்துள்ளார்.

Tags : Hong Kong ,Local Government ,Party ,party wins ,Hong Kong Local Election , Hong Kong Local Election, pro-democracy party
× RELATED பூச்சிக் கொல்லி மருந்து அதிகம் இந்திய...