×

மும்பை ஓட்டலில் கூடிய 162 எம்எல்ஏ-க்கள்: வாய்மையே வெல்லும்; சிவசேனா...ஆட்சியமைக்க இது கோவா அல்ல; மகாராஷ்டிரா: NCP

மும்பை: சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 162 எம்எல்ஏ-க்களின் அணிவகுப்பு மும்பை HotelGrandHyatt ஓட்டலில் இருந்து தொடங்கியது.

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்:

288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு கடந்த அக்டோபர் 21ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பாஜவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணி 161 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை   பலத்தை பெற்றது. இருந்தாலும் முதல்வர் பதவி பிரச்னை காரணமாக மோதல் ஏற்பட்டு ஆட்சி அமைக்க முடியாமல் போனது. தேர்தலில் 54 இடங்களில் வெற்றி பெற்றிருந்த தேசியவாத காங்கிரஸ் மற்றும் 44 இடங்களை பிடித்த காங்கிரஸ்   கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க சிவசேனா தீவிர முயற்சி மேற்கொண்டது.

புதிய அரசு அமைப்பதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியிருந்தன. உத்தவ் தாக்கரே மாநிலத்தின் முதல்வர் ஆவார் என்று கடந்த வெள்ளிக்கிழமை இரவு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியிருந்தார். சிவசேனா,  காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் நேற்று ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவும் முடிவு செய்திருந்தனர்.

மகாராஷ்டிரா அரசியலில் தலைகீழ் திருப்பம்:


இந்த நிலையில் மாநில அரசியலில் யாரும் எதிர்பாராத அதிரடி திருப்பம் நேற்று முன்தினம் காலை ஏற்பட்டது. அதிகாலை 5.47 மணிக்கு அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி ரத்து செய்யப்பட்டது. அடுத்த கணமே,  தேவேந்திர பட்நவிஸ் மற்றும்  அஜித் பவார் பதவியேற்பதற்கான ஏற்பாடுகளை கவர்னர் மாளிகை அவசர அவசரமாக செய்து முடித்தது. இதைத் தொடர்ந்து நேற்றுக் முன்தினம் காலை 8.05 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் தேவேந்திர பட்நவிஸ்  முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு:

இதற்கிடையே, மகாராஷ்ட்ராவில் பாஜகவை ஆட்சியமைக்க அனுமதித்ததில் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி ஒருதலைபட்சமாக முடிவெடுத்திருப்பதாக கூறி, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில்   தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக தொடரப்பட்டது. மேலும், பா.ஜ அரசு 24 மணி நேரத்துக்குள் பெரும்பாண்மையை நிருபிக்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்.வி. ரமணா, அசோக்பூஷன், சஞ்சன் கண்ணன் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்து, ஃபட்னாவிஸ் சமர்பித்த ஆதரவு கடிதம், ஆட்சியமைக்க உத்தரவிட்ட ஆளுநரின் கடிதம் ஆகியவற்றை நாளை  காலை 10.30 மணிக்கு மத்திய அரசு சமர்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கில் இன்று காலை 10:30 மணிக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும்  உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

விசாரணை ஒத்திவைப்பு:

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மகாராஷ்டிராவில் பாஜகவை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநரின் கடிதம் சீலிட்ட உறையில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்களின்  கடிதங்களும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அத்துடன் 54 தேசியவாத காங். எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதம் என அஜித்பவார் ஆளுநரிடம் அளித்திருந்த கடிதங்களும் தாக்கல் செய்யப்பட்டது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்,  காங்கிரஸ், பாஜக, ஆளுநர் தரப்பு வழக்கறிஞர்கள் தங்களது வாதங்களை முன் வைத்தனர். அனைத்து வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், நாளை காலை 10.30 மணி உத்தரவை பிறப்பிக்கப்படும் என்று அறிவித்தனர்.

162 எம்எல்ஏ-க்கள் பேரணி:

இதற்கிடையே, நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம்; சிவசேனா, தேசியவாத காங்., காங். அணிகளின் 162 எம்எல்ஏக்களும் பேரணியாக மும்பையில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்றிரவு 7 மணிக்கு செல்கிறோம் என்றும் தங்களுக்கு  போதுமான பலம் இருப்பதாக ஆளுநருக்கு நிரூபிக்கும் வகையில் அணிவகுப்பு நடத்தப்படவுள்ளது என்று சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அதன்படி, மாலை 7.30 மணியளவில், சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 162 எம்எல்ஏ-க்களின் அணிவகுப்பு மும்பை HotelGrandHyatt ஓட்டலில் தொடங்கியது. பேரணி தேசியவாத காங்கிரஸ் கட்சி  தலைவர் சரத்பவார், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்றது.

தலைவர்கள் உரை:

162 எம்எல்ஏ-க்களுக்கு மத்தியில் உரையாற்றிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, வாய்மையை வெல்லும் என்ற கொள்கையில் தாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், தங்கள் கூட்டணிக்கட்சி எம்எல்ஏ-க்களின் ஒற்றுமையை யாராவது  உடைக்க முடியுமா என்றும் சவால் விடுத்தார். நண்பர்களான தாங்கள் ஒற்றுமையுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறுகையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனாக் கட்சி கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. பெரும்பான்மை இல்லாத ஒரு அரசை ஆட்சியில் அமர்த்தி உள்ளதாக  குற்றம்சாட்டினார். மகாராஷ்டிராவில் பெரும்பான்மை இல்லாத ஓர் ஆட்சியை பதவியில் அமர்த்தி உள்ள இதுவே முதல்முறை என்று தெரிவித்தார். வெற்றிகரமாக அனைவரும் அணி திரண்டு இருப்பதற்கு பாராட்டுத் தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் அஜூத்பவார் எந்த முடிவையும் எடுக்க முடியாது. தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு கட்டளை பிறப்பிக்க  அஜித்பவாருக்கு அதிகாரம் இல்லை. ஆட்சியமைக்க தங்களுக்கு மராட்டிய ஆளுநர் அழைப்பு விடுப்பார் என்றும் நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார். பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியமைக்க இது கோவா அல்ல; மகாராஷ்டிரா. கர்நாடகா,கோவா,மணிப்பூரில் பெரும்பான்மை இல்லாமல் பாஜக ஆட்சி அமைத்தார்கள் என்றார்.

தொடர்ந்து, மும்பையில் அணிவகுப்பின் போது சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் அணிகளின் 162 ஆதரவு எம்எல்ஏக்கள் உறுதிமொழியும் ஏற்றனர்.


Tags : hotel ,Shiv Sena ,Mumbai ,Maharashtra ,Goa ,NCP. 162 MLAs ,NCP , Mumbai Hotel, 162 MLAs, Shiv Sena, Goa, Maharashtra, NCP
× RELATED நாகப்பட்டினம் சில்லடி தர்கா கடற்கரையில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை