×

செய்துங்கநல்லூர் முதல் குரும்பூர் வரை விபத்தினை தவிர்க்க அபாய வளைவு பகுதியில் சூரிய விளக்குகள்

வைகுண்டம்: செய்துங்கநல்லூர் முதல் குரும்பூர் வரை விபத்தினை தவிர்க்க 10 அபாய வளைவு சூரிய  விளக்குகளை சாலையோரங்களில் போலீசார் அமைத்துள்ளனர். நெல்லை-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் குறுகிய பாலங்களும், அபாயகரமான பல வளைவுகளும் உள்ளன. இதனால், கடந்த காலங்களில் நடைபெற்ற விபத்துக்களில் பல்வேறு உயிரிழப்புகளும் .உடலுறுப்பு மற்றும் பொருட்சேதங்களும் பொது மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் ஏற்பட்டுள்ளன. வளைந்த நிலையில் உள்ள சாலைகளால் திருச்செந்தூர் முருகன் கோயிலிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் முருகர் பக்தர்களுக்கும் சிறுசிறு விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கருங்குளம் அருகேயுள்ள குறுகிய பாலத்தில் வேன் கவிழ்ந்து 6 பேர் உயிரிழந்தனர். அப்போது, விபத்தில்லா பயணத்திற்கான பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சுரேஷ்குமார் உறுதியளித்தார்.இதனை தொடர்ந்து, ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லும் அரசு டவுன் பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொறுத்தும் பணியும் பெண்களின் பாதுகாப்பை மற்றும் சாதி ரீதியான தகராறுகளை தடுக்கும் விதமாகவும் பஸ் மார்ஷல் திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டது.ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி அருகேயுள்ள புதிய தாலுகா அலுவலகம் முன்பு கடந்த வாரம் திடீரென வேகத்தடை அமைக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட விபத்தினை தொடர்ந்து உடனடியாக வாகனங்களின் வேகத்தை குறைக்கும் விதமாக தடுப்பினை காவல் துறையினர் ஏற்படுத்தினர். இதனால், தொடர் விபத்துக்கள் தவிர்க்கப்பட்டன.

இந்நிலையில், நெல்லை-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் செய்துங்கநல்லூர் முதல் குரும்பூர் வரையில் விபத்தினை தவிர்க்க கருங்குளம், ஆதிச்சநல்லூர், சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட 10 இடங்களில் உள்ள சாலையோரங்களில் அபாய வளைவு சூரிய விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.எஸ்.பி. அருண்பால கோபாலன் உத்தரவின்படி, அபாய வளைவு சூரிய விளக்கு அமைத்த வைகுண்டம் டிஎஸ்பி சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர்கள் செய்துங்கநல்லூர் ரெகுராஜன், வைகுண்டம் ஜோசப் ஜெட்சன், சப்-இன்ஸ்பெக்டர் முருகபெருமாள் உள்ளிட்ட போலீசாரை பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பாராட்டினர். வைகுண்டம் டிஎஸ்பி சுரேஷ்குமார் கூறுகையில், செய்துங்கநல்லூர் முதல் குரும்பூர் வரை சுமார் 23கிமீ தூரத்தில் உள்ள அபாயகரமான வளைவுகளில் அமைக்கப்பட்டுள்ள சோலார் விளக்கு மூலம் விபத்தினை தவிர்க்க முடியும். என்றார். இத்திட்டத்தை தொடர் விபத்துக்கள் நடக்கும் மற்ற பகுதிகளிலும் தொடர வேண்டும். அவ்விளக்கு கம்பத்தில் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்தினால் பல்வேறு குற்ற சம்பவங்களை தடுத்திட முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பார்பாகும்.

Tags : area ,accidents ,Kurumbur ,Kalinganallur ,Accident ,risk curve area , Doorgananallur, Kurumbur, Risk Bend, Solar Lights
× RELATED அருமனை அருகே மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது