×

கீழப்பாவூர் வட்டாரத்தில் மாறி வரும் சீதோஷ்ணத்தால் மகசூல் குறைந்த கேந்தி பூக்கள்: விலையும் குறைந்ததால் விவசாயிகள் கவலை

பாவூர்சத்திரம்: கீழப்பாவூர் வட்டாரத்தில் மாறி வரும் சீதோஷ்ணத்தால் மகசூல் குறைந்த கேந்தி பூக்களுக்கு விலையும் குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் மலர் சந்தைக்கு பிரசித்த பெற்ற ஊராக பாவூர்சத்திரம் அடுத்த சிவகாமிபுரம் திகழ்கிறது. கீழப்பாவூர் வட்டாரத்தில் பல்வேறு பணப்பயிர்கள் விவசாயிகள் விளைவித்தாலும் சிவகாமிபுரம், அருணாப்பேரி, வடக்கு சிவகாமிபுரம், ஆண்டிப்பட்டி, கரும்பனூர்,ராஜபாண்டி, மேலபட்டமுடையார்புரம், நாகல்குளம், செட்டியூர், திப்பணம்பட்டி, உள்ளிட்ட விவசாயிகள் அறுவடை முடிந்ததும் கேந்தி பூக்களை பயிரிட்டுள்ளனர். மகசூல் எடுக்கும் பூக்களை விற்பனைக்காக விவசாயிகள் சிவகாமிபுரம் கமிஷன் கடைக்கு கொண்டு வருகின்றனர். ப்படி கொண்டு வரும் பூக்களை கேரளா, நெல்லை, சங்கரன்கோவில், தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள உள்ளூர் பூ வியாபாரிகள் ஏலத்திற்கு கேட்டு தங்கள் தேவைக்கேற்ப வாங்கி செல்கின்றனர்.

தற்போது கீழப்பாவூர் வட்டாரத்தில் விட்டுவிட்டு பெய்துவரும் பருவமழை மற்றும் அவ்வப்போது கொளுத்தும் வெயில் என மாறி வரும் சீதோஷ்ணத்தால் கேந்தி பூக்கள் மகசூல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் செடியிலேயே அழுகி உதிரும் அவலமும் ஏற்பட்டுள்ளது. மேலும், பலவித நோய் தாக்குததால் பூக்கள் விளைச்சலின்றி காணப்படுகிறது. நோய்களை கட்டுப்படுத்த விவசாயிகள் பலவித மருந்துகள் தெளித்தும் பலனில்லை. இதனால் சிவகாமிபுரம் மார்க்கெட்டிற்கு வழக்கமான 3 டன் கேந்தி பூக்கள் வரத்து தற்போது 500 கிலோவுக்கும் குறைவாக உள்ளது. இதனால் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மொத்த வியாபாரிகள் பெங்களூர், ஓசூர் பகுதியில் இருந்து கேந்தி பூக்களை கொள்முதல் செய்து செல்கின்றனர். இருப்பினும் போதிய அளவுக்கு விலை இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிலோவுக்கு ரூ.60 வரை விற்பனையான கேந்தி பூக்கள், தற்போது ரூ.30 ஆக குறைந்தது. இவ்வாறு போதிய விளை இல்லாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Tags : region ,Keezhappavur ,Kilappavur , Keelappavoor, Yield, Gandhi Flowers, Farmers
× RELATED மயிலாடுதுறை அருகே சொத்து தகராறில் ஒருவர் அடித்துக் கொலை!!