×

ஒலியை விட வேகமாகப் பறக்கும் கான்கார்டு விமானத்தின் புதிய மாடல்களைத் தயாரிக்க நாசா முடிவு

வாஷிங்டன்: ஒலியை விட வேகமாகப் பறக்கும் கான்கார்டு விமானத்தின் புதிய மாடல்களைத் தயாரிக்க நாசா முடிவு செய்துள்ளது. சன் ஆஃப் கான்கார்டு என்ற பெயரில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த விமானத்தின் மூலம் தற்போது அமெரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியா செல்லும் விமான பயணத்தின் நேரம் பாதியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எக்ஸ் 59 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் 55 ஆயிரம் அடி உயரத்தில் மணிக்கு ஆயிரத்து 500 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்படும் என நாசா தெரிவித்துள்ளது. ஒலியை விட வேகமாகப் பறக்கும் போது ஏற்படும் சோனிக் பூம் எனப்படும் காற்றின் வெடிப்புச் சப்தம் மிகக் குறைந்த அளவிலேயே சன் ஆஃப் கான்கார்டில் இருக்கும் என்றும் நாசா கூறியுள்ளது. 40 இருக்கைகள் கொண்டதாக தயாரிக்கப்படும் இந்தவகை விமானத்தை அமெரிக்காவின் லாக்ஹீட் மார்டின் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. முதலாவது விமானம் வரும் 2021-ம் ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

உலகின் மிக அதிவேக பயணிகள் விமான மாடல் என்ற பெருமை கன்கார்டு விமானத்திற்கு உண்டு என கூறப்பட்டுள்ளது. இயக்குதல் செலவு மிக அதிகம், விபத்து அபாயம் போன்ற காரணங்களால், 2003-ம் ஆண்டு இந்த விமானம் சேவையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில், போக்குவரத்து தேவையை நிறைவு செய்யும் விதத்தில், அதி விரைவான பயணிகள் விமானத்தை உருவாக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படும் எஞ்சின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சூப்பர்சானிக் பயணிகள் விமானங்கள் உருவாக்கம் முயற்சிகளில் படிப்படியான முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. நாசா அமைப்பும், லாக்ஹீட் மார்ட்டின் விமான நிறுவனமும் இணைந்து புதிய சூப்பர் சானிக் ரக பயணிகள் விமானத்தை தயாரித்து வருகின்றன. 290 மில்லியன் பவுண்ட் முதலீட்டில் இந்த புதிய சூப்பர்சானிக் விமானத்தை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த புதிய விமான திட்டம் QueSST என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. இந்த விமானம் கன்கார்டு விமானத்தின் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனிலிருந்து நியூயார்க் நகரை சாதாரண பயணிகள் விமானங்கள் சராசரியாக 8 மணி நேரம் செல்கின்றன எனவும், இந்த விமானம் வெறும் மூன்று மணிநேரத்தில் கடந்துவிடும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் எத்தனை பேர் பயணிக்க முடியும் என்பது உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படவில்லை. மாதிரி விமானத்தை உருவாக்கும் முயற்சிகளில் படிப்படியாக வெற்றிகள் கிடைத்து வருகின்றன. எனவே, இந்த விமானத்தின் சோதனை ஓட்டங்கள் வரும் 2021-ம் ஆண்டிலிருந்து துவங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags : NASA , NASA's,decision , build,new models ,Concorde aircraft
× RELATED இந்திய விண்வெளி வீரர்களுக்கு...