×

மகாராஷ்டிராவில் அவசரமாக ஆட்சி ஏன்? அதிகாரம் இருக்கிறது என்று எதையும் செய்யக்கூடாது: பாஜ மீது பிரேமலதா தாக்கு

அவனியாபுரம்: ‘மகாராஷ்டிராவில் இவ்வளவு அவசரமாக பாஜ ஆட்சி அமைக்க வேண்டிய அவசியமில்லை. கையில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக, பாஜ எதையும் செய்யக்கூடாது’ என்று மதுரையில் தேமுதிக பொருளாளர்  பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், மதுரை விமானநிலையத்தில் நேற்று அளித்த பேட்டி:தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் நச்சுத்தன்மை உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அத்தியாவசிய உணவுப்பொருளான பாலில் கலப்படம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து, இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா இவ்வளவு அவசரமாக ஆட்சி அமைக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தங்களது பலத்தை சட்டசபையில் நிரூபித்து அதிகாரப்பூர்வமாகவே ஆட்சிக்கு வந்து இருக்கலாம். இரவோடு, இரவாக அங்கு ஆட்சி  அமைத்துள்ளனர். கையில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எதையும் செய்யக்கூடாது. உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி குறித்து பேச தேமுதிகவில் குழு அமைத்துள்ளோம். அந்த குழு மூலம் அதிமுக தலைமையுடன் பேசி கூட்டணி குறித்து  முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

‘ஆளுமைமிக்க முதல்வர் வேண்டும்’
மதுரையில் நேற்று நடந்த ஒரு விழாவில் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், ‘‘நமக்கு தேவை, நியாயமான உள்ளாட்சி தேர்தல். இதை விரைவில் அறிவிக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில், தேமுதிகவில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு  செய்யப்படும். தமிழகத்திற்கு ஆளுமைமிக்க முதல்வர் வேண்டும். அது யார் என்று மக்களுக்கு தெரியும்’’ என்றார்.‘நடிகர்கள் அரசியலுக்கு வந்தால், விஜயகாந்துக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும்’ என்று, தமிழக கைத்தறித்துறை அமைச்சர்  பாஸ்கரன் பேசியது குறித்து கேட்டபோது, ‘‘அவர் யார் என்றே எனக்கு தெரியாது. இதுகுறித்து நான் பதில் சொல்ல விரும்பவில்லை’’ என்றார்.

Tags : Maharashtra ,attack ,Baja , Urgent Rule , Maharashtra?,power,Premalatha
× RELATED மகாராஷ்டிராவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் பலி