×

எரிவாயு குழாய் பதித்தாலும் விவசாயம் செய்யலாம்: தங்கராஜ், ஐஓசி தென்மண்டல பைப் லைன் பிரிவு பொதுமேலாளர்

இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் எண்ணூர்- தூத்துக்குடி வழியாக குழாய் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவது இல்லை,  10 சதவீதம் சந்தை மதிப்பு அடிப்படையில் நாங்கள் அவர்களுக்கு ஒரு தடவைக்காக நஷ்ட ஈடு  வழங்குகிறோம். நாங்கள், எரிவாயு குழாயை 6 அடிக்கு கீழ் பதித்து விடுகிறோம். மறுபடியும் நிலத்தை சரி செய்து அவர்களிடமே ெகாடுத்து விடுகிறோம். அதன்பிறகு அவர்கள் அதில் தொடர்ந்து விவசாயம் செய்யலாம். தற்போதும் பல இடங்களில் விவசாயம் செய்து கொண்டு தான் இருக்கின்றனர். கிட்டதட்ட 15 வருடங்களாக சென்னை, திருச்சி, மதுரைக்கு இடையே குழாய் பணிகள் 2004-05 இடைப்பட்ட காலத்தில் நடைபெற்றது. அன்று முதல் அந்த குழாய்  வழியாக தான் பெட்ரோல், டீசல் எந்தவித தடையின்றி தான் போய் கொண்டு இருக்கிறது. இத்திட்டம் தமிழகத்தில் எண்ணூர்- தூத்துக்குடி வரை 1000 கிலோ மீட்டர் தூரத்திற்கு போடப்படுகிறது. கர்நாடகா, ஆந்திரா என 1500 கிலோ மீட்டருக்கு போடப்படவுள்ளன. தமிழகத்தில் மட்டும் 1000 கிலோ மீட்டர் தூரத்திற்கு போடப்படுகிறது.
ஏனென்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் எரிவாயு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பது தான் அரசின் திட்டம். நிலம் கையகப்படுத்துவதில் சுமார் 2580 ஏக்கர் நில உபயோக உரிமைக்காக உரிமை கோருவோம். அதில்  2005ம் ஆண்டு ஏற்கனவே 1750 ஏக்கர் நில உபயோக உரிமை ெபற்று ஒரு பைப்லைன் சென்று கொண்டு இருக்கிறது. மீதி 750 ஏக்கர் நில உபயோக உரிமை பெற அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 750 ஏக்கர் தான் கூடுதலாக  எடுக்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு மொத்தம் ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

  எரிவாயு, ஆஸ்திரேலியா, கத்தார், ரஷ்யாவில் இருந்து கப்பல் மூலம் கொண்டு வரப்படுகிறது. பின்னர், எண்ணூரில் இருந்து வெளியிடங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த திட்டம் 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 1500 கிலோ மீட்டர் முடிய  வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் பயன்படுத்தினால் அவர்களுக்கு மானியம் கொடுக்கின்றனர். மக்கள் பயன்படுத்த வேண்டும்  என்று இதுவும் அரசின் திட்டம் ஆகும்.  சென்னையில் வெள்ளபாதிப்பு வந்த போது பைப் லைன் மூலம் திருச்சிக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து ெபட்ரோல் பங்குகளுக்கு அனுப்பப்பட்டது.  கிராமஙகளில் தேவையான பள்ளி, போர்வெல்  வசதி செய்து கொடுக்கிறோம்.  பூமிக்கு அடியில் எரிவாயு குழாய் செல்வதால் தண்ணீர் கலக்கும் என்று கூறுகிறார்கள் அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. இந்தக்குழாய் உலகத்தரம் வாய்ந்த குழாய். ஒரு தடவை பூமிக்கு அடியில் புதைத்து விட்டால் துருபிடிக்காத  வகையில் இருக்கும். ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.75லட்சம் முதல் ரூ.1 கோடி வரை ஆகும். இது சாதாரமாண கிடைக்க கூடிய குழாய்கள் இல்லை. இதன் தடிமண் 12 மில்லிமீட்டர், மண்ணுடன் தொடர்பு இருந்தால் துருபிடிக்கும் என்பதால்  மூன்று பிளாஸ்டிக் லேயர் கோட்டிங் போடப்படுகிறது. கம்ப்யூட்டர் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

தமிழ்நாட்டில் 1100 கிலோ மீட்டர் தூரம் பைப்லைன் 15 வருடம் செல்கிறது. ஆனால் இதுவரை எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்பட்டதில்லை. கடந்த 8 வருடங்களாக மீனவ மக்கள் கடற்கரையோரம்  போட அனுமதிக்கவில்லை. அதன்பிறகு  நாங்கள் அவர்களிடம் பேசி எடுத்துக்கூறி அவர்களின் ஒத்துழைப்புடன் போடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெருகும், மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.சென்னையில் வெள்ளபாதிப்பு வந்த போது பைப் லைன் மூலம்  திருச்சிக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து ெபட்ரோல் பங்குகளுக்கு அனுப்பப்பட்டது.  கிராமஙகளில் தேவையான பள்ளி, போர்வெல் வசதி செய்து கொடுக்கிறோம்.

Tags : Tangaraj ,IOC South Zone Pipeline Division ,Thangaraj ,Southwest Pipeline Division , gas pipe ,imprinted,Thangaraj, IOC Southwest Pipeline,Division, General Manager
× RELATED 10 ஆண்டுகளில் மோடியின் பிரதமர் பதவி...