×

இந்தியா முழுவதும் நடந்த சாலை விபத்துக்களில் கடந்த 5 ஆண்டுகளில் 7.35 லட்சம் பேர் இறப்பு: உயிரிழப்புகள் வருடந்தோறும் அதிகரிப்பு

சிறப்பு செய்தி: இந்தியா முழுவதும் நடந்த சாலை விபத்துகளில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 7.35 லட்சம் பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் வாகனங்களின் பயன்பாடு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக அனைத்து சாலைகளும் நெரிசல் மிகுந்து காணப்படுகின்றன. ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பது, மதுபோதையில் வாகனங்களை இயக்குவது, மொபைல் போன்களில் பேசிக்கொண்டு செல்கின்றனர். இதுபோன்ற செயல்களால் விபத்துகள் நடக்கிறது. இதைத்தடுக்க ஹெல்மெட் சோதனை  தீவிரப்படுத்தப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. வாகனங்களை விற்பனை ெசய்யும் நிறுவனங்களிடத்தில் ெஹல்மெட்டும் சேர்த்து விநியோகிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களிடத்தில் சாலைகளில் பயணிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய சாலைவிதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. எனினும் சாலை விபத்துக்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதன்விளைவாக கடந்த 5  ஆண்டுகளில் மட்டும், சாலைவிபத்துக்களில் சிக்கி 7.35 லட்சம் பேர் இறந்துள்ளனர்.

இதையடுத்து தற்போது சாலைபாதுகாப்பு விதிமுறைகளில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டு திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகனச்சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. போதையில் வாகனம் ஓட்டினால் 6 மாத சிறை அல்லது  ₹10,000 அபராதம். இதுவே, இரண்டாவது முறையாக இருந்தால், 2 ஆண்டுகள் சிறை அல்லது 15,000 அபராதம். லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் ₹5,00 முதல் ₹5,000 வரை விதிக்கப்படும்.  அதிகவேகத்தில் வாகனத்தில் இயக்கும் பட்சத்தில், டூ வீலராக இருந்தால் ₹1,000 அபராதம் விதிக்கப்படும்.  இதுபோல் ஒவ்வொரு பிரிவிலும்  ஏராளமான சட்டதிருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம் சாலை விபத்துக்களை குறைக்க முடியும் என அரசு நம்புகிறது. எனினும் தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால், இன்னும் இச்சட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : deaths ,road accidents ,India , road accidents , 5 years,Deaths ,yearly
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...