கஞ்சா விற்ற 7 பேர் கைது

தாம்பரம்: தாம்பரம் சேலையூர், இந்திரா நகரில் கஞ்சா விற்பனை நடப்பதாக தெற்கு இணை ஆணையர் மகேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் சேலையூர், இந்திரா நகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது ஒரு ஆட்டோவில் பதுக்கி வைத்து கஞ்சா விற்று கொண்டிருந்த பெரும்பாக்கத்தை சேர்ந்த பிரகாஷ் (28), ஒட்டியம்பாக்கத்தை சேர்ந்த கௌதம் (21), சிறுசேரியை சேர்ந்த ஜெய்கணேஷ் (20), சேலையூரை சேர்ந்த விக்னேஷ் (24), பெரும்பாக்கத்தை சேர்ந்த காமின் (25), மதுபாலன் (21), தாம்பரத்தை சேர்ந்த தினேஷ் (27) ஆகிய 7 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.Tags : Seven,arrested,selling,cannabis
× RELATED கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது