மின்வயர் மீது பலூன் விழுந்ததால் மின்சார ரயில் சேவை பாதிப்பு

சென்னை: செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி நேற்று மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது. காலை 9.30 மணியளவில் கோடம்பாக்கம் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு, நுங்கம்பாக்கம் நிலையம் வந்தபோது அங்குள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த  பலூன்கள் கொத்தாக பறந்து வந்து ரயில் பாதையில் உள்ள மின்கம்பி மீது விழுந்துள்ளது.

உடனே ஓட்டுனர் ரயிலை நிறுத்திவிட்டு மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலூனை அறுத்து எடுத்தனர். இதனால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதன் பிறகு அரை மணி நேரம் கழித்து அனைத்து ரயில்களும் வழக்கம்போல் இயக்கப்பட்டது. இகுறித்து எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : balloon crash , Electric train,servic,damage,balloon crash
× RELATED நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர்...