டெங்கு தடுப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு மிதிவண்டி ஓட்டம்: மாநகராட்சி ஆணையர் துவக்கி வைப்பு

சென்னை: மாநகராட்சி சார்பில் டெங்கு நோய் தடுப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மிதிவண்டி தொடர் ஓட்டத்தை ஆணையர் பிரகாஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி மற்றும் கிண்டி ரேஸ் கிளப் டி டேபிள் பிரண்ட்ஸ் சார்பில் கிண்டி ரேஸ் கிளப் மைதான வளாகத்தில் இருந்து மகாபலிபுரம் வரை சுமார் 50 கி.மீ., பயணதூரம் கொண்ட டெங்கு நோய் தடுப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மிதிவண்டி தொடர் ஓட்டத்தை ஆணையர் பிரகாஷ்  கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த மிதிவண்டி தொடர் ஒட்டத்தில்  கலந்து கொண்டவர்கள் டெங்கு நோய் தடுப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மிதிவண்டிகளில் ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மேலும், இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை தவிர்ப்பதை வலியுறுத்தும்  வகையில் அனைவருக்கும் துணிப்பைகள் வழங்கப்பட்டன. இந்த மிதிவண்டி தொடர் ஓட்டம் கிண்டி ரேஸ் கிளப் மைதான வளாகத்திலிருந்து தொடங்கி வேளச்சேரி, பெருங்குடி, சோழிங்கநல்லூர் வழியாக கிழக்கு கடற்கரை சாலையை அடைந்து பின்னர் மகாபலிபுரம் சென்றடைந்தது.இந்த நிகழ்ச்சியில், துணை ஆணையர் (பணிகள்) குமாரவேல் பாண்டியன், வட்டார துணை ஆணையர்கள் ஆல்பி ஜான் வர்கீஷ், ஸ்ரீதர், ஆகாஷ், கிண்டி ரேஸ் கிளப் உறுப்பினர் ஆண்டனி, இணை இயக்குநர், மக்கள் தொடர்பு அலுவலர் உமாபதி, மண்டல அலுவலர், செயற்பொறியாளர்கள் மற்றும் கிண்டி ரேஸ் கிளப் டி டேபிள் பிரண்ட்ஸ் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>