குழந்தைகள் தின பேரணி

பெரம்பூர்: வியாசர்பாடியில் 30ம் ஆண்டு சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சென்னை பெருநகர தோழி அமைப்பும் தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து நேற்று முன்தினம் மாலை குழந்தைகள் உரிமை பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல் துறை துணை ஆணையர் ஜெயலட்சுமி கலந்து கொண்டு இப்பேரணியை துவக்கி வைத்தார். இதில் வியாசர்பாடியை சுற்றியுள்ள குடிசை பகுதி குழந்தைகள் மற்றும்  200க்கும் மேற்பட்ட பெண்கள், தன்னார்வலர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

வியாசர்பாடி காவல் நிலையத்தில் தொடங்கிய இந்த பேரணி சத்தியமூர்த்தி நகர், முல்லைநகர், எம்கேபி நகர் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வந்து அம்பேத்கர் கல்லூரி அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நிறைவு அடைந்தது. இதில் பங்கேற்றவர்கள் குழந்தைகள் பாதுகாப்பு,  குழந்தைகள் கல்வி உரிமை உள்ளிட்ட வாசகங்களை கையில் ஏந்தியபடி, கோஷங்களை எழுப்பியபடி வந்தனர். நிகழ்ச்சியில் குழந்தைகள் உரிமை குறித்த விளம்பர சுவரொட்டி வெளியிடப்பட்டது.

Related Stories:

>