×

சாதாரண மக்கள் அணுகும் வகையில் ராஜ்பவனை ஆளுநர்கள் மாற்ற வேண்டும் : ஜனாதிபதி அறிவுரை

புதுடெல்லி: ‘‘சாதாரண மக்களும், மாநிலத்தில் உள்ள பல்வேறு அமைப்பின் பிரதிநிதிகளும் எளிதில் அணுகும் வகையில் ராஜ்பவனை ஆளுநர்கள் மாற்ற வேண்டும்,’’ என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவுரை வழங்கியுள்ளார். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்களின் 50வது 2 நாள் மாநாடு டெல்லியில் நேற்று முடிந்தது. இறுதிநாள் நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:அரசியல் சாசனத்தின் 70வது ஆண்டு தினம் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம். மக்களிடையே அடிப்படை கடமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.

அரசியல் சாசன தினத்தை அனைத்து ராஜ்பவன்களும் சிறப்பாக கொண்டாட வேண்டும். நமது கூட்டாட்சி அமைப்பில் ஆளுநர் பதவி மிக முக்கியமானது. மத்திய, மாநில அரசுகள் இடையே, சிறந்த ஒருங்கிணைப்பை உறுதி செய்வதில் ஆளுநர்களுக்கு பங்கு உள்ளது. சாதாரண மக்கள் செல்ல முடியாத இடம் ராஜ்பவன் என்ற காலனி ஆதிக்க பாரம்பரியத்தை மாற்ற வேண்டும். சாதாரண மக்களும், மாநிலத்தின் பல்வேறு அமைப்பின் பிரதிநிதிகளும் ஆளுநரை எளிதில் சந்திக்கும் வகையில் ராஜ்பவனை மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



Tags : Governors ,President , Governors , Rajpawan, ordinary people, accessible,
× RELATED கோடைகாலத்தில் தடையில்லாமல் குடிநீர்...