அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

பாண்டு: ‘‘அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது,” என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் வரும் 30ம் தேதி தொடங்கி, 5 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிஸ்ராம்பூர் சட்டப்பேரவை தொகுதியில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று வாக்கு சேகரித்தார்.

பிரசார கூட்டத்தில் அவர் பேசுகையில், “1952ம் ஆண்டு டாக்டர் ஷியாம பிரசாத் முகர்ஜி ஒரு நாட்டுக்கு , இரண்டு அரசியலமைப்புக்கள், இரண்டு பிரதமர்கள், இரண்டு கொடிகள் இருக்க முடியாது என்று கூறினார். தற்போது, அவரின் கனவை நிறைவேற்றி இருக்கிறோம். ஜெய் ராம் கோஷங்கள் ஒலிக்கிறது. அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டப்படும். உலகில் உள்ள எந்த சக்தியாலும் ராமர் கோயில் கட்டுவதை தடுத்து நிறுத்த முடியாது. கட்டுமான பணியை செய்தவற்கான தடைகள், உச்ச நீதிமன்றத்தால் சரி செய்யப்பட்டுள்ளது,” என்றார்.


Tags : building ,Rajnath Singh ,Ram temple ,Ayodhya ,Ram , prevent, building , Ram temple, Ayodhya,Rajnath Singh's agenda
× RELATED நாளை மின் தடை பகுதிகள்