×

மே.வங்கத்தில் 3 தொகுதிக்கு இடைத்தேர்தல்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் காலியாக உள்ள 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.
இந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலுக்கு பின்னர் மேற்கு வங்கத்தில் நடைபெறும் முதல் தேர்தலாகும். மக்களவை தேர்தலில் 42 இடங்களில் பாஜ இடங்களில் வெற்றி பெற்றது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை காட்டிலும் 4 தொகுதிகள் மட்டுமே குறைவாக எடுத்திருந்தது. கரக்பூர் சதார் மற்றும் கரிம்பூர் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ.க்கள் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. காலியகன்ஞ் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ உயிரிழந்ததால் காலியானது.

இந்த 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகின்றது. தேர்தல் முடிவுகள் 28ம் தேதி அறிவிக்கப்படுகிறது. ‘அயோத்தி வழக்கு தீர்ப்பு, தேசிய குடியுரிமை பதிவேடு திருத்த மசோதா சட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகள், மக்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பிரதிபலிக்கும் தேர்தலாக இது இருக்கும்,’ என அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.


Tags : May 3,by-election,for Vol
× RELATED மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள...