×

அரிசி ஆதரவு விலையை குறைக்க அரசு முடிவு

புதுடெல்லி: அரிசிக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை குவின்டாலுக்கு ₹500 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய உணவு கழகம் மூலம் உணவு தானியங்கள் கொள்முதல் மற்றும் விநியாகம் செய்யப்படுகிறது. இந்த நிறுவன கிடங்குகளில் மொத்தம் 60 மில்லியன் டன் உணவு தானியங்கள் இருப்பு உள்ளன. தற்போது 23.1 மில்லியன் டன் அரிசி மற்றும் 37.3 மில்லியன் டன் கோதுமை இருப்பு உள்ளது.

 இருப்பு அதிகமாக இருப்பதால் அவற்றை மொத்த வியாபாரிகளுக்கு விற்க செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக குறைந்த பட்ச ஆதாரவு விலையை குறைக்க திட்டமிட்டுள்ளது. தற்போது அரிசிக்கான ஆதரவு விலை குவின்டாலுக்கு ₹2,785 ஆக உள்ளது. இதை ₹2,250ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கோதுமை விலையில் எந்த மாற்றமும் இல்லை. கோதுமை குண்விண்டாலுக்கு ₹2,080 என உள்ளது என மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



Tags : Government , Government's,decision, reduce rice,support price
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்