×

பெட்ரோல் விலை 17 நாளில் ரூ2 உயர்வு

புதுடெல்லி: பெட்ரோல் விலை கடந்த 17 நாட்களில் 2 ரூபாய் அதிகரித்துள்ளது.  சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. கடந்த ஆண்டு அக்டோபரில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 9 ரூபாய்க்கு மேல் அதிகரித்தது. சென்னையில் ஒரு லிட்டர் 87 வரை விற்கப்பட்டது.  மத்திய மற்றும் மாநில தேர்தல்களின் போது விலை உயர்வு தவிர்க்கப்பட்டதால் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை. ஆனால், இந்த மாதம் பெட்ரோல் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் இந்த மாத துவக்கத்தில் விலை சரிந்தாலும், 8ம் தேதிக்கு மேல் விலை உயர தொடங்கியது.  

கடந்த 12ம் தேதி முதல் 22ம் தேதி வரை 2 முறை மட்டுமே விலை உயர்ந்தது. கடந்த 2 நாட்களாக சிறிது குறைந்துள்ளது. இருப்பினும் 17 நாட்களில் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ₹2.04 உயர்ந்து நேற்று ₹77.49க்கு விற்கப்பட்டது. டீசல் 8 காசு குறைந்து ₹69.47க்கு விற்கப்பட்டது. பெட்ரோல் நேற்று டெல்லியில் ₹74.54, மும்பையில் ₹80.20, பெங்களூருவில் ₹77.09க்கு விற்கப்பட்டது.

Tags : Petrol price,hiked, Rs 2 , liter
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்...