ஆண்கள் உலகில் சாதித்தேன்...: சார்லோட் பிளேர் உற்சாகம்

வேர்ல்டு ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட் (WWE) போட்டிகளில் கவனிக்கதக்க மல்யுத்த வீராங்கனை சார்லோட் பிளேர் (33). அமெரிக்காவை சேர்ந்த இவர் மல்யுத்தம் மட்டுமின்றி நடிகை, எழுத்தாளர் என பன்முகத் திறன் கொண்டவர். இப்போது WWE  போட்டியை பிரபலப்படுத்த இந்தியா வந்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது: இந்தியாவில் இப்போது WWE  ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையில் எனது இடத்தை வெற்றிகரமாக உருவாக்கி இருக்கிறேன். நீங்கள் எதையாவது சாதிக்க விரும்பினால், உங்களின் ஒவ்வொரு விநாடியும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு மணி நேரமும் அந்த இலக்கை நோக்கியே இருக்க வேண்டும்.

அப்படி செய்தால் நீங்கள் விரும்பும் எதையும் அடைய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறேன். அதைத்தான் பெண்களுக்கு எனது செய்தியாக சொல்ல விரும்புகிறேன். இந்திய பெண்கள் மல்யுத்தம் போன்ற விளையாட்டுகளில் தொழில்முறை வீராங்கனைகளாக தங்களை மாற்றிக் கொள்வது நல்ல விஷயம்.கவிதா தேவியின் திறமையை பார்த்திருக்கிறேன். இந்திய பெண்கள் WWE போட்டிகளில் வெல்ல வாய்ப்புகள் அதிகம். இந்தியாவில் அதற்கென பயிற்சி மையத்தை தொடங்குவது இந்த வாய்ப்புகளை மேலும் அதிகரிக்க செய்யும்.இவ்வாறு பிளேர் கூறியுள்ளார்.

Related Stories: