×

பாபர் ஆஸம் சதம் வீண் ஆஸி. இன்னிங்ஸ் வெற்றி

பிரிஸ்பேன்: பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்டில், ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 5 ரன் வித்தியாசத்தில் வென்றது. பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 240 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 580 ரன் குவித்தது. பர்ன்ஸ் 97, வார்னர் 154, லாபஸ்ஷேன் 185, மேத்யூ வேடு 60 ரன் விளாசினர்.

இதைத் தொடர்ந்து, 340 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 3ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 64 ரன் எடுத்திருந்தது. ஷான் மசூத் 27, பாபர் ஆஸம் 20 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். ஷான் மசூத் 42 ரன் எடுத்து கம்மின்ஸ் வேகத்தில் பெயின் வசம் பிடிபட்டார். இப்திகார் அகமது டக் அவுட்டாகி வெளியேற, பாகிஸ்தான் 94 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், பாபர் ஆஸம் - முகமது ரிஸ்வான் ஜோடி 6வது விக்கெட்டுக்கு கடுமையாகப் போராடி 132 ரன் சேர்த்தது. பாபர் ஆஸம் 104 ரன் (173 பந்து, 13 பவுண்டரி) விளாசி லயன் சுழலில் பெவிலியன் திரும்பினார். ரிஸ்வான் 95 ரன் (145 பந்து, 10 பவுண்டரி), யாசிர் ஷா 42, ஷாகீன் அப்ரிடி 10 ரன் எடுக்க, இம்ரான் கான் 5 ரன்னில் வெளியேறினார்.

பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 335 ரன் எடுத்து (84.2 ஓவர்) ஆல் அவுட்டானது. நசீம் ஷா (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸி. பந்துவீச்சில் ஹேசல்வுட் 4, ஸ்டார்க் 3, கம்மின்ஸ் 2, லயன் 1 விக்கெட் வீழ்த்தினர். லாபஸ்ஷேன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இன்னிங்ஸ், 5 ரன் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா 60 புள்ளிகளை தட்டிச் சென்றது. அந்த அணி 1-0 என முன்னிலை வகிக்க 2வது மற்றும் கடைசி டெஸ்ட் அடிலெய்டில் 29ம் தேதி தொடங்குகிறது.

Tags : Babar Azam Satnam ,Aussie ,innings , Babar Azam,Satnam ,vain Aussie. Winning,innings
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...