×

இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா இங்கிலாந்து?

மவுன்ட் மவுங்கானுயி: நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்டில், இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது.பே ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன் குவித்து ஆல் அவுட்டானது. பர்ன்ஸ் 52, டென்லி 74, பென் ஸ்டோக்ஸ் 91, பட்லர் 43 ரன் எடுத்தனர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 3ம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 394 ரன் எடுத்திருந்தது (141 ஓவர்). வாட்லிங் 119 ரன், சான்ட்னர் 31 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். அபாரமாக விளையாடிய இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்தனர். வாட்லிங் இரட்டை சதம் விளாச, சான்ட்னர் சதம் அடித்து அசத்தினார். இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 161 ரன் சேர்த்தது. சான்ட்னர் 126 ரன் (269 பந்து, 11 பவுண்டரி, 5 சிக்சர்), டிம் சவுத்தீ 9, வாட்லிங் 205 ரன் (473 பந்து, 24 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்க, நியூசிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 615 ரன் என்ற ஸ்கோருடன் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. வேக்னர் 11, போல்ட் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இங்கிலாந்து பந்துவீச்சில் சாம் கரன் 3, லீச், ஸ்டோக்ஸ் தலா 2, ஆர்ச்சர், ரூட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 262 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, 4ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 55 ரன் எடுத்துள்ளது. பர்ன்ஸ் 31, சிப்லி 12, லீச் (0) விக்கெட்டை பறிகொடுத்தனர். டென்லி 7 ரன்னுடன் களத்தில் உள்ளார். கை வசம் 7 விக்கெட் இருக்க, இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே இன்னும் 207 ரன் தேவை என்ற நெருக்கடியுடன் இங்கிலாந்து அணி இன்று கடைசி நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.  

* ‘பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்க சச்சின் கொடுத்த ஆலோசனை வெகுவாக உதவியது. அந்திசாயும் நேரத்தில் அதிக கவனமாக பேட் செய் என்றார். அதை அப்படியே பின்பற்றினேன். ஒருநாள், டி20 போட்டிகளைப் போலவே டெஸ்ட் போட்டிகளையும் நன்கு மார்க்கெட் செய்து பிரபலப்படுத்த வேண்டும். நன்கு திட்டமிட்டு பயிற்சி செய்த பிறகு ஆஸ்திரேலியாவில் பகல்/இரவு டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ளலாம் என நினைக்கிறேன்’ என்று இந்திய அணி கேப்டன் கோஹ்லி கூறியுள்ளார்.
* பிரிமியர் பேட்மின்டன் லீக் தொடரின் 5வது சீசனில் இருந்து காயம் காரணமாக விலகுவதாக நட்சத்திர வீராங்கனை சாய்னா நெஹ்வால் அறிவித்துள்ளார்.
* ‘முறைகேடுகளின் கூடாரமாக உள்ள ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தை சுத்தம் செய்யும் வாய்ப்பை வீணடித்து விடாதீர்கள். இதை நம் இருவருக்குமான சொந்த பிரச்னையாக பார்க்காதீர்கள். ஊழல் பெருச்சாளிகளிடம் சிக்கிவிடாமல், உரிய நடவடிக்கை எடுத்தால் இளம் கிரிக்கெட் வீரர்களின் எதிர்காலத்தை உங்களால் காப்பாற்ற முடியும்’ என்று அசாருதீனை வலியுறுத்தி அம்பாதி ராயுடு ட்வீட் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* சையது முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரின் சூப்பர் லீக் பி பிரிவு ஆட்டத்தில் தமிழக அணி இன்று பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.
* டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் பைனலில் ஸ்பெயின் - கனடா அணிகள் மோதுகின்றன.

Tags : England , Will England,avoid , innings, defeat?
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது