×

மணமேல்குடியில் மீன்கள் விலை குறைவு

மணமேல்குடி: மணமேல்குடியில் ஞாயிற்று கிழமையான இன்று மீன்கள் விலை குறைவாக இருந்தது. புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. ஏராளமான மீன் ஏலக்கடைகள், இறால் கம்பெனிகள் செயல்படுகின்றன. இங்கு கட்டுமாவடி, மணமேல்குடி, பொன்னகரம், புதுக்குடி, சேதுபாவாசத்திரம், மந்திரிப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் பிடிக்கும் மீன்களும், ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள விசைப்படகு மீனவர்கள் பிடிக்கும் மீன்களும் விற்பனைக்கு வருகிறது.

மேலுமு் ராமநாதபுரம், பாம்பன், ராமேஸ்வரம், தூத்துக்குடி, காரைக்கால், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளிலிருந்து மீன்கள் விற்பனைக்கு வருகிறது. இந்த மீன்களை வாங்குவதற்காக மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் சரக்கு வாகனங்களில் தினமும் வந்து செல்கின்றனர் கார்த்திகை மாத விரதத்தையொட்டி ஞாயிற்று கிழமையான இன்று  கட்டுமாவடி, மணமேல்குடி மீன் மார்க்கெட்டுகளில் மீன்கள் விலை குறைந்துள்ளது. இதனால் கூட்டம் அதிகமாக இருந்தது. விலை குறைவால்  மீன் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Manamelgudi , Manamelgudi, fish, low prices
× RELATED மணமேல்குடி அருகே சாலை வசதியின்றி தீவு போல மாறிய குடுவையூர்