×

முத்துப்பேட்டை அருகே ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த கோயில், 30 கடை இடிப்பு: அதிகாரிகள் அதிரடி

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை அருகே ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த கோயில், 30 கடைகள் இடித்த தரைமட்டமாக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் கிராமத்தில் செட்டிக்குளம் உள்ளது. பிரதான பாசன வாய்க்காலான வடிவாய்க்கால் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்தை கடந்து செட்டிக்குளத்திற்கு வந்து மெயின் ரோட்டை கடந்து செல்கிறது. இதில் தனியார் ஆக்கிரமிப்புகள் பெருகியதால் தண்ணீர் வரத்து தடைப்பட்டது.
இதுகுறித்து நாச்சிக்குளம் தாஹீர் என்பவர், தமிழக அரசின் 540அரசாணையை சுட்டிக்காட்டி செட்டிக்குளம் மற்றும் வடிவாய்க்கால்கள் மீது உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கடந்தாண்டு அதிகாரிகளுக்கு மனுக அனுப்பினார்.

இதையடுத்து ஜூலை 6ம்தேதி 30க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அதிரடியாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதில் விடுபட்டுப்போன கட்டிடங்கள் இடிக்கும் பணி நேற்று காலை மீண்டும் நடந்தது.  குளத்தில் திருத்துறைப்பூண்டி சாலையோரம்,  சித்தமல்லி செல்லும் சாலையோரம் இருந்த ஆஞ்சநேயர் கோயில் உட்பட 30க்கும் மேற்பட்ட கடைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.  முத்துப்பேட்டை டிஎஸ்பி இனிகோ திவ்யன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Tags : Temple ,occupation site ,Muthupetty ,shops , Muttupettai, Temple, 30 shop demolition
× RELATED மதுராந்தகத்தில் பாசி படர்ந்து...