×

ஆளில்லா டெலிவரி முறையை அறிமுகம்: சூட்கேஸ் வடிவிலான ரோவர் என்ற ரோபோவை வடிவமைத்துள்ளது ரஷ்ய நிறுவனம்

ரஷ்யா: ரஷ்ய நாட்டு இணையதள வணிக நிறுவனமான யாண்டெக்ஸ் வரும் காலத்தில் ஆளில்லா டெலிவரி முறையை அறிமுகப்படுத்ததும் நோக்கில், சூட்கேஸ் வடிவிலான ரோவர் என்ற ரோபோவை வடிவமைத்துள்ளது. அமேசான், கூகுள் உள்ளிட்ட உலகின் பல முன்னணி நிறுவனங்கள், ரோபோ ஆராய்ச்சியில் தீவிர முனைப்பு கட்டி வருகின்றன. இந்நிலையில் தான் யாண்டெக்ஸ் நிறுவனம், ரோவர் என்ற ரோபோவை தயாரித்து வெள்ளோட்டம் விட்டுள்ளது.

சூட்கேஸ் அளவிலான இந்த ரோபோட் தற்போது மாஸ்கோவில், யாண்டெக்ஸின் முக்கிய தலைமையகம் மற்றும் துணை அலுவலகங்களில் இயக்கப்படுகிறது. யாண்டெக்ஸ் ரோவரானது ஆட்டோமெட்டிக்காக சாலைகளில் பயணித்து, யாண்டெக்ஸ் வாடிக்கையாளரின் வீட்டு வாசலுக்கே பொருட்களை கொண்டுபோய் தந்து விட்டு,திரும்பி வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோட் தனது பாதையை தானே திட்டமிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் பொருட்களை அடையாளம் காணும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. கூகுளின் வேமோ தானோட்டி கார்களில் உள்ள அதே லிடார் தொழில்நுட்பம் ரோவரிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது தூரங்களைக் கணக்கிடவும் இருட்டில் பயணிக்கவும் அனுமதிக்கிறது. எனவே தெருக்களில் தடைகளை சில மீட்டர் தொலைவிலேயே உணர்ந்து, எதன் மீதும் மோதாமல் செல்லும் திறன் பெற்றது ரோவர். சோதனைகள் வெற்றி பெற்றதும், யாண்டெக்ஸ் ரோவர்,உணவு விநியோகங்கள் உட்பட யாண்டெக்ஸின் சேவைகள் முழுவதிற்கும் பயன்படுத்தப்படும்.

Tags : Russian ,company , Delivery system, robot, Russian company
× RELATED ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த...