குபேர கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் குபேரலிங்கம் முன்பு லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை: குபேர கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள குபேரலிங்கம் முன்பு லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக போற்றப்படும் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வருவது சிறப்பு. கார்த்திகை மாதம் சிவராத்திரி அன்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை குபேர லிங்கத்திற்கு குபேரர் வந்து சூட்சமாக பூஜை செய்வார் என்பதும், அதன் பின்னர் குபேரர் கிரிவலம் செல்வார் என்பதும், குபேரர் பூஜை செய்வதை கண்டால் வீட்டில் செல்வம் பெருகும் என்பதும் ஐதீகம். இதையொட்டி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்கத்திற்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை செய்யப்பட்டது.

Related Stories: