×

கோவை உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட திருமதி அழகி பட்டம் வென்ற பெண் விருப்பமனு தாக்கல்: வைரலாகும் புகைப்படங்கள்

கோவை: கோவையில் திருமதி அழகி பட்டம் வென்ற பெண் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்த புகைப்படங்கள் வைரலாகி உள்ளன. கோவை கவுண்டன்பாளையத்தை சேர்ந்த 38 வயதான சோனாலி பிரதித் கோவை மேயர் மற்றும் 17-வது வார்டு கவுன்சிலர்க்கு போட்டியிட விருப்பமனு கொடுத்துள்ளார். இவர் கடந்த 2015, 2016-ம் ஆண்டு திருமதி கோயம்புத்தூர் பட்டத்தையும், 2017-ம் ஆண்டு புனேவில் நடைபெற்ற mrs.இந்தியா என்ற அழகி போட்டியில் பங்கேற்றும் பட்டம் வென்றுள்ளார்.

மொரிஷியஸ் நாட்டில் அண்மையில் நடைபெற்ற mrs.யுனிவர்ஸ் என்ற என்ற அழகி பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் திடீரென அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பமனு கொடுத்திருப்பது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் சோனாலி விருப்பமனு தாக்கல் செய்த புகைப்படம் மற்றும் அமைச்சர் வேலுமணியுடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


Tags : Viral Photos Woman ,Coimbatore ,Ms ,Beauty pageant ,AIADMK ,government ,elections , Coimbatore, Local Elections, AIADMK, Ms Brunette Degree, Optional petition
× RELATED அட்டுக்கல் பகுதியில் யானை தாக்கி படுகாயம் அடைந்த தொழிலாளி உயிரிழப்பு!!