×

அபின் கடத்திய வாலிபர் பிடிபட்டார்

சென்னை: கொத்தவால்சாவடி போலீசார் நேற்று முன்தினம் மாலை சின்னப்பமுதலி தெருவில் ரோந்து சென்றபோது, சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது, 100 கிராம் அபின் இருந்துள்ளது. அதன் மதிப்பு பல லட்சம் என்று தெரிகிறது. விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த தினேஷ் (26) என்பதும், போதை பொருட்கள் கடத்தி, விற்க முயன்றதும் தெரிந்தது. அவரை கைது செய்து, அவருக்கும் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா என்று விசாரித்து வருகின்றனர்.



Tags : Abin ,plaintiff , Abin abducted,plaintiff ,caught
× RELATED அருமனை அருகே வாலிபர் மீது தாக்குதல்