காளையுடன் டிக்டாக் தொழிலாளி பலி: நீரில் மூழ்கி பரிதாபம்

சோமனூர்: கோவை சோமனூர் அடுத்த வடுகபாளையம் நீர்தேக்க குட்டையில் காளை மாட்டுடன் இறங்கி டிக்டாக் எடுத்த தொழிலாளி நீரில் மூழ்கி  பலியானார்.கோவை சோமனூர் அடுத்த கே.ராயர்பாளையத்தை சேர்ந்த பரமேஸ்வரன்(38), புவனேஸ்வரன் (18), மாதவன்(19), விக்னேஸ்வரன்(22) ஆகியோர் வடுகபாளையத்தில் உள்ள நீர்த்தேக்க குட்டையில் நீச்சலடிக்க சென்றுள்ளனர். ஒரு மாட்டையும் உடன் அழைத்து ெசன்று, மாட்டை நீரில் குளிப்பாட்டியும், மாட்டின் மேல் ஏறிக்கொண்டு நீச்சல் அடித்தும்,  டிக்டாக் வீடியோ எடுத்தும் அட்டகாசம் செய்துள்ளனர்.

இந்நிலையில் விக்னேஸ்வரன் ஆழமான பகுதியில் இறங்கியதால் நீரில் மூழ்கி தத்தளித்தார். இதை பார்த்த சக நண்பர்கள் அவரை காப்பாற்ற முடியாமல் கரையின் மேல் வந்து அருகில் இருந்தவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து அன்னூர் தீயணைப்பு துறையினர் வந்து நீரில் மூழ்கி பலியான விக்னேஸ்வரனின் உடலை 2 மணி நேரம் போராடி மீட்டனர். பலியான விக்னேஸ்வரன் விசைத்தறி தொழிலாளி ஆவார். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories:

>