×

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு

மேட்டூர்:  கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்து வருகிறது. நேற்று முன்தினம், காலை விநாடிக்கு 7,510 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 6943 கனஅடியாக சரிந்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 6,000 கனஅடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக விநாடிக்கு 700 கனஅடி வீதமும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் பரிசல் சவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அருவியில் குளிக்க விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கிறது.



Tags : Mettur dam ,Mettur Dam Water Fall , Mettur Dam, Water fall
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.15 அடியாக குறைவு..!!