×

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவிடாமல் தடுக்கும் ஆட்சியாளர்கள்: திமுக மீது பழி போட வெட்கப்பட வேண்டும் என மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலை நடத்தவிடாமல் தடுக்கும் முதல்வர் பழனிசாமி, திமுக மீது பழி போடுவதற்கு வெட்கப்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: ‘உள்ளாட்சிக்கு மறைமுகத் தேர்தல்’ என்பதில் தன் அரசுக்கு ஏற்பட்ட ‘கொள்கை மாற்றம்’ என மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை மேற்கோள் காட்டியிருக்கிறார் பழனிசாமி. திமுக ஆட்சியில் நிகழ்ந்ததும் கொள்கை மாற்றம் தான். ‘2001ல் என்னுடைய சென்னை மாநகர மேயர் தேர்தல் வெற்றியில் தொடங்கி, தமிழகத்தில் எங்கெல்லாம் திமுகவினர் உள்ளாட்சி அமைப்புகளில் இருந்தார்களோ அங்கெல்லாம் ‘ஒத்துழையாமை இயக்கம்’ நடத்தி உள்ளாட்சி நிர்வாகத்தையே அடியோடு நிர்மூலமாக்கியது அதிமுக அரசு. அபத்தமான அந்த நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகவே, திமுக ஆட்சிக் காலத்தில் மேயர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு ‘மறைமுகத் தேர்தல்’ கொண்டு வரப்பட்டது. ஆனால் 2016ல் இருந்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

‘மேயர்களுக்கு நேரடி தேர்தல்’ என்று முதலில் 2018ல் சட்டம். பிறகு ‘நேரடித் தேர்தல் தான்’ என்று முதல்வரே பேட்டி, ஆனால் ஒரே வாரத்தில் ‘மறைமுகத் தேர்தல்’ என்று அவசரச்சட்டம்! ஏன் இந்த குழப்பமும் குளறுபடியுமான கொள்கை மாற்றம்? உங்கள் ஆட்சியில், உங்களை உள்ளாட்சி அமைப்புகளில் செயல்பட விடாமல் தடுத்தது யார். இதுதான் திமுகவின் கேள்வி. ‘திடீர் அவசரச் சட்டம்’, ‘தேர்தல் ஆணையச் செயலாளர் மாற்றம்’, ‘வார்டு வரையறைகளில் குளறுபடி’, ‘பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு புதிய வார்டு வரையறை செய்யாதது’ என்று அடுக்கடுக்கான குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளாட்சித் தேர்தலை நடத்தவிடாமல் தடுக்கும் பழனிசாமி, திமுக மீது பழி போடுவதற்கு வெட்கப்பட வேண்டும். உங்கள் அறியாமைக்கும் இயலாமைக்கும் திமுக மீது பழிபோடும் போக்கைக் கைவிட்டு, வகிக்கின்ற பொறுப்புக்கேற்ப, பொய்களை தவிர்த்து,  இனியேனும் உண்மையைப் பேசுங்கள். இதுதான் முதல்வருக்கு இப்போது நான் முன்வைக்கும் வேண்டுகோள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மேயர்களுக்கு நேரடி தேர்தல்’ என்று முதலில் 2018ல் சட்டம். பிறகு ‘நேரடித் தேர்தல் தான்’ என்று முதல்வரே பேட்டி, ஆனால் ஒரே வாரத்தில் ‘மறைமுகத் தேர்தல்’ என்று அவசரச்சட்டம்! ஏன் இந்த குழப்பமும் குளறுபடியுமான கொள்கை மாற்றம்

பாலில் நச்சுத்தன்மை பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்
பாலில் நச்சுத்தன்மை என்பது பெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்பதால், முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான உணவாகவும், விவசாயிகள் முதல் வணிகர்கள் வரை பலருக்கும் அடிப்படைப் பொருளாதார பலமாகவும் உள்ள பாலில் நச்சுத்தன்மை என்பது பெரும் ஆபத்து. இதன் உண்மைத் தன்மையை உணர்ந்து முதல்வர் தீவிர கவனம் செலுத்தி, நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



Tags : Rulers ,elections ,MK Stalin ,Tamil Nadu ,DMK Nadu , Rulers blocking, local elections,Tamil Nadu, MK Stalin condemns shyness
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...