×

சென்னை விமான நிலையத்தின் சுற்றுச்சுவரில் 2.5 கி.மீ.,க்கு பாரம்பரிய ஓவியங்கள்: ஒரேநாளில் மாணவ, மாணவிகள் அசத்தல்

சென்னை: சென்னை திரிசூலம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வரை 2.5 கிமீ தூரத்திற்கு இந்திய கலாச்சாரத்தை விளக்கும் வகையில் சுற்றுச்சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டன. தமிழ்நாடு, கேரளா, கர்நாடக, ஆந்திரா ஆகிய மாநில பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வ அமைப்பினர், ஓவியர்கள் என 1500க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நாளில் இரண்டரை கிலோ மீட்டர் சுற்றுச்சுவரில் ஓவியங்களை வரையும் பணி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிந்தது.  

இதில் இந்திய, தமிழக கலாச்சாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள், இயற்கையான மலைப் பிரதேசங்களில் மரங்களை அகற்றி கட்டிடங்கள் அமைத்தல், சமூக பிரச்னைகள், விளையாட்டு போட்டிகள், உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் ஓவியங்கள் என 400 பாகங்களாக பிரிக்கப்பட்டு  சுவரில் ஓவியங்கள்  வரையப்பட்டன. மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வரைவதை பார்த்து அந்த பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து போலீசாரும் படம் வரைந்து மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.இது, சென்னை விமான நிலையத்தை சுற்றிலும் அழகுடும்படுத்துவதுடன் தமிழக கலாச்சாரத்தை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையிலும் விழிப்புணர்வு ஏற்படும் வகையிலும் வரையப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் கூறுகையில், ஓவியங்கள் வரைந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பொது இடங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள இதுபோன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

Tags : airport ,Chennai ,student , Chennai airport, Traditional ,perimeter, overnight, student
× RELATED சென்னை விமான நிலையம் முதல்...