தேவேந்திர பட்நவிசுக்கு எடப்பாடி, ஓபிஎஸ் வாழ்த்து

சென்னை: மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றுள்ள தேவேந்திர பட்நவிசுக்கு முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது: மகாராஷ்டிரா முதல்வராக பொறுப்பேற்றுள்ள உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். மகாராஷ்டிராவில் முழுமையான ஆட்சி நடைபெற எனது வாழ்த்துக்கள்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அனுப்பியுள்ள வாழ்த்து செய்தி: மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் தேவேந்திர பட்நவிஸ்க்கும், துணை முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் அஜித் பவாருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். மகாராஷ்டிராவின் நீடித்த நிலையான வளர்ச்சிக்கு உழைத்திட நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு கூறியுள்ளனர்.

Related Stories:

>