×

போலி ஆணையுடன் வந்த கேரள வாலிபர் சிக்கினார்

சென்னை: இந்திய உணவு கழக பணியில் சேர போலி நியமன ஆணையுடன் வந்த கேரள வாலிபர் சிக்கினார்.சென்னை, நுங்கம்பாக்கத்தில் இந்திய உணவுக்கழக அலுவலகம் உள்ளது. கேரளாவை சேர்ந்த அஜினோ சிவதாசன் (33) என்பவர் ஸ்டெனோகிராபர் பணியில் சேர நியமன ஆணையுடன் நேற்று அலுவலகத்திற்கு வந்தார். அது போலி ஆணை என தெரிந்தது.இதுகுறித்து இந்திய உணவு கழக அலுவலகத்தின் மேலாளர் அளித்த தகவல்களின்படி ஆயிரம் விளக்கு போலீசார் அந்த வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அதில், கேரளாவை சேர்ந்த புரோக்கர் ஒருவரிடம் 5 லட்சம் கொடுத்து அரசு வேலைக்கான ஆணை பெற்றதாக கூறினார்.

அந்த வாலிபர் நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்திய உணவுக் கழகத்தில் பணியில் சேருவதற்கு வந்த போது அந்த ஆணை போலியானது என்பது தெரியவந்தது
இதையடுத்து சிவதாசனின் பாஸ்போர்ட்டை போலீசார் வாங்கி வைத்துக்கொண்டு கேரளாவுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தன்னை ஏமாற்றிய நபர் மீது கேரள போலீசில் புகார் அளித்து எப்ஐஆர் வாங்கிக் கொண்டு வந்து காண்பித்து விட்டு பாஸ்போர்ட்டை பெற்றுச் செல்லுமாறு போலீசார் தெரிவித்து அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.



Tags : Kerala ,The Kerala Youth Who Came , Kerala youth , fake order ,trapped
× RELATED கேரளாவில் மயோனைஸ் சாப்பிட்ட 70...