×

உத்தரவை மீறினால் அனைத்து டாஸ்மாக் ஊழியர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை: நிர்வாகம் எச்சரிக்கை

சென்னை: தலைமை அலுவலகத்தின் உத்தரவை மீறி செயல்பட்டால் கடையில் உள்ள அனைத்து ஊழியர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைவைத்து மதுவிற்பனை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து தினமும் ஏராளமான புகார்கள் தலைமை அலுவலகத்துக்கு வருகிறது. இதன் அடிப்படையில் எடுத்த 110க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பிடிபட்டனர். ஏற்கனவே, கடந்த ஜூன் மாதம் முதல் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய முதுநிலை மண்டல மேலாளர்களுக்கு நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால், 6 மாத கால அறிக்கையை தாக்கல் செய்வதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வந்தனர்.

இந்தநிலையில், கூடுதல் விலைக்கு மதுவிற்பனை செய்த ஊழியர்களை குறைந்த விற்பனை நடைபெறும் கடைகளுக்கு பணிமாறுதல் செய்ய முதுநிலை மண்டல மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு 5 முதுநிலை மண்டல மேலாளர்கள் அவசர சுற்றறிக்கையை அனுப்பியுள்ளனர்.அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:மாவட்டம் வாரியாக மதுபான சில்லறை விற்பனை கடைகளில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மதுபானங்கள் கூடுதல் விலைவைத்து விற்பனை செய்த பணியாளர்களை தலைமை அலுவலக அறிவுரையின் படி குறைந்த விற்பனை கடைகளுக்கு மாறுதல் செய்த உத்தரவு நகல் மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பப்படுகிறது.

இந்த உத்தரவின்படி சம்பந்தப்பட்ட பணியாளர்கள் புதிய பணியிடத்தில் பொறுப்பேற்றுக்கொண்டதின் இறுதி அறிக்கையை அலுவலகத்திற்கு கிடைத்திடுமாறு அனுப்ப வேண்டும். பணிமாறுதல் வழங்கப்பட்ட பணியாளர்கள் யாரேனும் தொடர்ந்து பழைய கடையிலேயே பணி புரிவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடையின் அனைத்து பணியாளர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : task force ,administration , Disciplinary,violated, administration warning
× RELATED நாடாளுமன்றத் தொகுதி வாரியாக அதிமுக...