×

அம்பை-ஆலங்குளம் சாலையில் 100 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரம் விழுந்தது

அம்பை: நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து  வருகிறது. அம்பாசமுத்திரம் - ஆலங்குளம்  சாலை கோவில்குளம்  கடனாநதி பாலம்  அருகே  நூற்றாண்டுகளை கடந்த பழமையான ஆல மரம் உள்ளது. தொடர் மழை  காரணமாக இன்று அதிகாலை, ஆலமரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது.  இந்த  வழியாகதான் ஆலங்குளம், சங்கரன்கோவில், திருநெல்வேலி செல்லும் அரசு  பஸ்கள், தனியார் வாகனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் சென்று  வருகின்றன. சாலையில் ஆலமரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இதனால் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.

தகவல் அறிந்து  அம்பாசமுத்திரம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை நிலைய அலுவலர் இசக்கி  தலைமையில் வீரர்கள் சென்று, நவீன கருவிகள் மூலம் மரக்கிளைகளை வெட்டி  போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இதனால் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து  பாதிக்கப்பட்டது.மரத்தடிகள் ஆங்காங்கே சாலையில் அகற்றப்படாமல் உள்ளன. மரத்தடிகளில்  வாகனங்கள் மோதி விபத்து ஏற்படாமல் தடுக்க மரத்தடிகளை உடனடியாக  அப்புறப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Ambai-Alangulam , 100-year-old banyan tree , fell , Ambai-Alangulam road
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...