×

மயிலாடும்பாறை அருகே கனமழையால் நிரம்பியது ‘கோவில்பாறை கண்மாய்’ : விவசாயிகள் மகிழ்ச்சி

வருசநாடு: மயிலாடும்பாறை அருகே கனமழைக்கு கோவில்பாறை கண்மாய் நிரம்பியுள்ளதால்  விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம், மயிலாடும்பாறை அருகே தங்கம்மாள்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட  கோவில்பாறை கிராமத்தில் ‘கோவில்பாறை கண்மாய்’ உள்ளது. இந்த கண்மாய் கடந்த 40ஆண்டு காலமாக தூர்வாரப்படாமல் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கண்மாய் கரைகளை மட்டும் அதிகாரிகள் பலப்படுத்தினர். ஆனால் கண்மாயை தூர்வாராமல் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில், கனமழையால் 20 ஆண்டுகளுக்கு பிறகு கோவில்பாறை கண்மாய் நிரம்பியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இனியாவது கண்மாயை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

இது குறித்து கிராமவாசி குமார் கூறுகையில்,‘‘பலமுறை கண்மாயை தூர்வார வேண்டும் என அதிகாரியிடம் மனு அளித்துள்ளோம். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. கண்மாயில் தான் சுடுகாடு உள்ளது. இதனால் சடலங்களை புதைக்கும் போது மிகுந்த சிரமம் ஏற்படுகிறது’’என்றார்.  கோவில்பாறை முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜெயராஜ் கூறுகையில்,‘‘நான் கவுன்சிலராக இருந்த போது கண்மாய் கரைகளை மட்டும் பலப்படுத்தினேன். பின்னர் எவ்வித பணிகளும் செய்யவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கண்மாயை தூர்வாரி முறையாக ஆழப்படுத்த வேண்டும்’’ என்றார்.




Tags : Mayiladuthurai ,Kovilparai , Heavy Rain, Farmers' Pleasure, Kovilparai
× RELATED சீர்காழி அருகே குடிநீர் வழங்காததைக்...