×

அவசர சட்டம் ஜனநாயக படுகொலை முத்தரசன் கண்டனம்

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேற்று அளித்த பேட்டி: இலங்கையில் பாதுகாப்புத்துறை அதிகாரியாக இருந்த கோத்தபய ராஜபக்சே அதிபராகவும், அவர் சகோதரர் மகிந்தராஜபக்சே பிரதமராகவும் மாறி இருக்கிறார்கள். போர்க்குற்றம் புரிந்து இருக்கிறார்கள் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டப்பட்ட இவர்கள் நாட்டை ஆளுகிற வாய்ப்பை பெற்று இருக்கிறார்கள். இந்நிலையில் இருவரும் இந்தியாவிற்கு வர இருக்கும் சூழலில் அவர்களிடம் விவாதித்து, தமிழ் மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு மத்திய அரசாங்கத்திற்கு இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டம் அப்பட்டமான ஜனநாயக படுகொலை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Mutharasan
× RELATED மதரீதியாக வாக்கு சேகரித்த புகாரில்...