×

மிசா வி.கிருஷ்ணமூர்த்தி மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: கடலூர் மேற்கு மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் விருத்தாசலம் மிசா வி.கிருஷ்ணமூர்த்தி மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: கடலூர் மேற்கு மாவட்ட திமுக நெசவாளர் அணி செயலாளர் விருத்தாசலம் மிசா வி.கிருஷ்ணமூர்த்தி வயது மூப்பின் காரணமாக, 85வது வயதில் மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு வேதனையடைந்தேன். அவரது மறைவிற்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

1959ல் உறுப்பினராகி, விருத்தாசலம் நகரச் செயலாளர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் கட்சிப் பணியும், விருத்தாசலம் நகர்மன்ற உறுப்பினர், கடலூர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மற்றும் மாவட்ட வேளாண்மை விற்பனை குழு தலைவர் ஆகிய பொறுப்புகள் மூலம் மக்கள் பணியும் ஆற்றியவர்.
நெருக்கடி நிலைமையின் அடக்குமுறைகளை சந்தித்து அதை தாங்கிக் கொண்டு கழகப் பணியாற்றிய தொண்டர்களின் கோட்டமாம் திமுகவின் தீரமிகு தொண்டராக விளங்கிய அவரை தற்போது இழந்திருப்பது அவரது குடும்பத்தினருக்கும், திமுகவிற்கும் பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : death ,Miza V. Krishnamoorthy ,MK Stalin , Misa v. Krishnamurthy, the late, MK Stalin, condolences
× RELATED நீட் மற்றும் பிற நுழைவுத் தேர்வுகள்...