×

மதுரை விளாச்சேரியில் மாணவர்கள் தூர்வாரிய ஊருணியில் ஆற்று நீர் தேக்கம்

மதுரை : மதுரை விளாச்சேரியில் பராமரிப்பின்றி கிடந்த ஊருணியை மாணவ, மாணவிகளே தூர்வாரி, ஆற்று தண்ணீர் தேக்கப்பட்டது. மதுரை உள்பட தமிழகம் முழுவதும் போதுமான மழை இல்லாததால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க வேண்டும். இருக்கிற நிலத்தடி நீரையும் பாதுகாப்பான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது. இதன்படி ஏரி, கண்மாய், குளங்களை குடிமராமத்து திட்டத்தின் கீழ், விவசாயிகள், பொதுமக்கள், சமூக அமைப்பினர் தாமாக முன்வந்து பருவமழை காலத்திற்கு முன்பாக (ஜூலை, ஆகஸ்டில்) தூர்வாரினர்.

மதுரை விளாச்சேரியில் 5 ஏக்கர் பரப்பளவில் உள்ள அய்யர் ஊருணி கடந்த பல ஆண்டுகளாக எவ்வித பராமரிப்பின்றி தூர்வாரப்படாமல் கிடந்தது. இதையறிந்த மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியை சேர்ந்த என்எஸ்எஸ். மாணவ, மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் ஊருணியை சுத்தப்படுத்தி, தூர்வாரினர். சமூக கண்ணோட்டத்துடன் இப்பணியை பார்த்த அப்பகுதி மக்களும் அவர்களும் உடன்பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தூர்வாரிய ஊருணிக்கு தற்போது மதுரை மேற்கு தாசில்தார் கோபி, தலையிட்டு நிலையூர் கால்வாய் மூலம் ஆற்றுத்தண்ணீர் நிரப்பப்பட்டது. பல ஆண்டுகளுக்கு பின்பு ஊருணியில் தண்ணீர் தேங்கியதை ஊர்மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.

Tags : Madurai Valachery River Reservoir , Madurai ,vilachery ,Students ,Uruni
× RELATED வெயிலின் தாக்கத்தால் தேவை அதிகரிப்பு; மண் பாண்டங்கள் தயாரிப்பு அமோகம்