×

நாகை அருகே 7 பேரை கடித்து குதறிய குரங்கு

கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆர்ப்பாக்கம் கிராமம் மந்தக்கரை பகுதியில் குளம் உள்ளது. குளத்தைச் சுற்றி வீடுகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 2 குரங்குகள் ஆர்ப்பாக்கம் கிராமத்துக்குள் நுழைந்தன. இவைகள் அந்த கிராமத்தை சுற்றியுள்ள மரங்களில் தாவி,தாவி சென்று தேவையான உணவை உண்டு உயிர் வாழ்ந்து வருகின்றன. ஆனால் சில நேரங்களில் அப்பகுதியை சுற்றியுள்ள வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை எடுக்க முற்படும் போது அதனை மக்கள் மிரட்டுகின்றனர். அப்போது அவர்களை தாவி வந்து இந்த குரங்குகள் கடித்து விடுகின்றன. ஆர்ப்பாக்கம் கிராமம் மந்த கரைப்பகுதியில் வெங்கட்ராமன் என்பவருடைய வீட்டு தோட்டத்தின் வழியே வந்த குரங்கு கொல்லைப்புறமாக வீட்டிற்குள் நுழைய முயன்ற போது இன்று காலை குரங்கை வெங்கட்ராமன்(51) விரட்டினார். அப்போது பாய்ந்து வந்த குரங்கு அவரது கையில் கடித்து விட்டு ஓடிவிட்டது. இதேபோல் நேற்று மற்றும் நேற்று முன்தினம் வெங்கட்ராமன் மனைவி பானுமதி(48). மகன்கள் ராஜேஷ்(26), விக்னேஷ்(20) ஆகியோரையும் கையில் கடித்து விட்டு ஓடிவிட்டது. மேலும் அதே பகுதியில் வசித்து வரும் பானு(35), விஜயலட்சுமி(20), அஸ்வின்(13) மற்றும் சாரதா (60) ஆகியோரை கையில் கடித்துவிட்டது.இதுகுறித்து ஆர்ப்பாக்கம் கிராம மக்கள் கூறுகையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த கிராமத்துக்கு வந்த 2 குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து வீட்டிலுளள ஏதாவது தின்பண்டங்கள் இருந்தால் எடுத்துச்சென்று விடும். ஆனால் யாரையும் கடிக்கவில்லை. கடந்த பத்து நாட்களாக ஒரு குரங்கை யாராவது மிரட்டினால், துரத்தி வந்து கடித்து விட்டு ஓடி விடுகிறது. இதுகுறித்து உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக வனத்துறையினர் தலையிட்டு இந்த குரங்கை பாதுகாப்பாக கூண்டு வைத்து பிடித்து வேறு இடத்தில் உள்ள வனப்பகுதியில் விட வேண்டும் என்றனர்….

The post நாகை அருகே 7 பேரை கடித்து குதறிய குரங்கு appeared first on Dinakaran.

Tags : Nagai ,Kollidam ,Mandakarai ,Orpakkam ,Mayiladuthurai district ,Dinakaran ,
× RELATED துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி...