×

மாசாணியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.34.34லட்சம்

பொள்ளாச்சி :  பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணப்பட்டது,  இதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.34.34லட்சம் இருந்துள்ளது.  பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில்  இந்த மாதத்திற்கான உண்டியல் எண்ணும் பணி இந்து அறநிலையத்துறை ஈச்சனாரி  கோயில் உதவி ஆணையர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில்,   மாசாணியம்மன் கோயில் உதவி ஆணையர் ஆனந்த், ஆய்வாளர் மல்லிகா, கண்காணிப்பாளர்  தமிழ்வாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பக்தர்கள், தன்னார்வலர்கள் பலர்  பக்தர்களின் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

 கோயில்  வளாகத்தில் இருந்த மொத்தம் 22 பொது உண்டியல் மற்றும் 9 தட்டுக்காணிக்கை  உண்டியல்களில் உள்ள காணிக்கைகள் எண்ணப்பட்டது. இதில் பொது உண்டியல் மூலம்  ரூ.25 லட்சத்து 80ஆயிரத்து 488ம். தட்டு காணிக்கை உண்டியலில் ரூ.8 லட்சத்து  53 ஆயிரத்து 615ம் என மொத்தம் ரூ.34லட்சத்து 34ஆயிரத்து 104இருந்தது.  மேலும் தங்கம் 230கிராம், வெள்ளி 219கிராம் இருந்துள்ளது என கோயில்  நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Tags : Masaniamman Temple Rs34.34Lakhs ,Pollachi Maasaniyamman Temple ,Hyundiyal Kanikai , Maasaniyamman Temple,hyundiyal Kanikai ,Pollachi
× RELATED நாடு முழுவதும் இளநிலை நீட் தேர்வு: நாளை நடக்கிறது