×

பிரசவத்திற்காக வந்த பெண்ணின் வயிற்றில் ஊசியை வைத்து தைத்ததாக புகார்: ராமநாதபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பிரசவத்திற்காக வந்த பெண்ணின் வயிற்றில் ஊசியை வைத்து தைத்ததாக புகார் தெரிவித்துள்ள பெண்ணின் உறவினர்கள், ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புள்ளியை அடுத்த மரவெட்டி வலசை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ரம்யா என்ற பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், கருவுற்ற ரம்யா, அப்பகுதிக்கு அருகாமையில் உள்ள உச்சிப்புள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனது பிரசவத்திற்காக பதிவு செய்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 19ம் தேதியன்று பிரசவத்திற்கான தேதி கொடுக்கப்ட்டிருந்த நிலையில் அன்று ஊச்சிப்புள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரம்யா அனுமதிக்கபட்டுள்ளார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு அறுறை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, உறவினர்கள் அனுமதியுடன் அறுவை சிகிச்சையானது நடைபெற்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், ரம்யாவுக்கு மிகுதியான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ரம்யாவை மருத்துவர்கள் மீண்டும் பரிசோதித்துள்ளனர். அப்போது, உடைந்து ஊசி ஒன்று ரம்யாவின் அடி வயிற்று எலும்பின் மேலே இருப்பது எக்ஸ்ரே மூலம் தெரியவந்துள்ளது. அதனை அகற்றுவதற்கு போதிய அளவிலான எலும்பு சார்ந்த மருத்துவர்கள் அங்கு இல்லாததால், ரம்யாவை ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு பரிந்துரைந்துள்ளனர். இதையடுத்து, ராமநாதரபுத்தில் அனுமதிக்கப்பட்ட ரம்யாவை பரிசோதித்த மருத்துவர்கள், அங்கு சிகிச்சை ஏதும் அளிக்காமல் மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், ரம்யாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்களை கண்டித்து உச்சிப்புள்ளி ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : childbirth ,stitches ,Relatives ,siege ,health center ,Ramanathapuram , Childbirth, Ramanathapuram, Uchipulli, Primary Health Center, Woman, Stomach, Needle, Struggle
× RELATED மம்தா நலம்: மருத்துவர்கள் தகவல்