×

கொல்கத்தாவில் தனியார் நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை: கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டை வீசி எரிந்த ஊழியர்கள்

கொல்கத்தா: கொல்கத்தாவில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிறுவன கட்டிடத்தில் இருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வீசி எரிந்தனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பென்டின்க் சாலையில் ஹாக் மெர்கன்டைல் என்ற தனியாருக்குச் சொந்தமான ஏற்றுமதி- இறக்குமதி நிறுவனத்தின் தலைமை அலுவகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

அலுவலக கட்டிடத்தின் தரைதளத்தில் பாதுகாப்பு ஊழியர்களும், அதிகாரிகளும் நின்றுகொண்டிருந்தன. அப்போது, அலுவலக கட்டிடத்தில் இருந்து ஊழியர்கள் சிலர் 100, 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் தாள்களை கட்டுக்கட்டாக வீசினர். கட்டுக்கட்டாகவும், கொத்துக் கொத்தாகவும் வந்து விழுந்த பணத்தைக் கண்ட பொதுமக்கள் அதனை அள்ளிச் சென்றனர். ஆனால் எவ்வளவு பணம் வீசப்பட்டது என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. தற்போது, இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Tags : company ,Kolkata , Income-tax scrutiny of private company in Kolkata: employees burnt to the banknote
× RELATED திருப்பூரில் பனியன் கம்பெனியை...