பைக் மோதி டெய்லர் பலி

தண்டையார்பேட்டை: பஸ் ஏறுவதற்காக சென்ற டெய்லர் பைக் மோதி பலியானார். திருவொற்றியூரைச் சேர்ந்தவர் செல்லப்பா (55). டெய்லராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு கடற்கரையிலிருந்து ராஜாஜி சாலையை கடந்து பஸ் ஏறுவதற்கு சென்றார். அப்போது பெரியமேடு பகுதியை சேர்ந்த டோமினிக் சேவியர் (30) என்பவர் புல்லட் செல்லப்பா மீது மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட செல்லப்பாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து யானைகவுனி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செல்லப்பாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்லப்பா நேற்று முன்தினம் நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து புல்லட்டை பறிமுதல் செய்து  டோமினிக் சேவியரிடம்  விசாரித்து  வருகின்றனர்.

Related Stories:

More