×

முன்னாள் மாணவர்கள், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்கள் அரசு பள்ளி தரத்தை உயர்த்த உதவுங்கள்: அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்

சென்னை: தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக அரசு 2019-20ம் ஆண்டு பள்ளி கல்வி துறையின் வளர்ச்சிக்காக  ₹28,757.62 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அரசு அதிக அளவில் நிதிகளை ஒதுக்கினாலும், இது என் பள்ளி, அதன் வளர்ச்சியில் நானும் பங்கெடுப்பதில் பெருமை  கொள்கிறேன் என்ற எண்ணம் பள்ளியின் முன்னாள் மாணவர்களின் இதயத்தில் உருவானால் தான் அரசு பள்ளிகளின் தரத்தை மேன்மேலும் உயர்த்தி அரசு பள்ளிகளை மெருகூட்டிட வழிவகை செய்திடும். இதன் தொடர்ச்சியாக, 5-11-2019 அன்று முதல்வர், இதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள இணையதளம் (https://contribute.tnschools.gov.in) ஒன்றை துவக்கி வைத்துள்ளார்.

எனவே, அரசு பள்ளிகளில் பயின்று தற்போது பல்வேறு தொழில் நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவர்களும், தற்போது தொழிலதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்களும், சமூக அக்கறை கொண்ட   நிறுவனங்களும் தங்களது சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் அரசு பள்ளிகளை தத்தெடுத்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்திட வாருங்கள்.  பழைய மாணவர்கள் மற்றும் நல்ல நிலையில் உள்ளவர்கள்  தாங்கள் வழங்க நினைக்கும் தொகையை Payment Gateway (https://contribute.tnschools.gov.in) என்ற இணையதளம் மூலம் எந்த பள்ளிக்கு நிதியுதவி வழங்க விரும்புகின்றனரோ அந்த பள்ளிக்கு வழங்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Chenkottayan ,Help Alumni ,Institutions ,Request Alumni ,organizations ,government schools ,Minister Senkotayan , Alumni, socially, concerned ,government schools,Minister Senkotayan
× RELATED அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள FPI...